'வாக்கிங்' போகும்போது 'பெண்ணின்' மார்பகத்தில் 'பாய்ந்த' துப்பாக்கி 'குண்டு'!.. 'சிகிச்சையின்போது' காத்திருந்த 'ஆச்சரியம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது கட்டுரை ஒன்றில் தற்போது குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் டொரன்டோ நகரை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் காலையில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவரது மார்பகத்தில் லேசாக வலி எடுத்துள்ளது. இதனை அடுத்து அவர் பக்கவாட்டில் தொட்டு பார்த்துள்ளார். அதன் பிறகுதான் அவருக்கு தெரிந்தது அங்கு ரத்தம் வந்து கொண்டிருந்ததை  பற்றி. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர்கள் உடனடியாக அந்தப் பெண்மணியை பரிசோதிக்க, அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆம், அந்த பெண்மணிக்கு இடது மார்பகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால் துப்பாக்கி குண்டு ஊடுருவ முடியாமல் மின்னல் வேகத்தில் திரும்பியதில் வலதுபக்க மார்பகத்தில் பாய்ந்து நின்றிருந்தது இதற்கு காரணம் அவரது மார்பகங்கள் செயற்கையாக பொருத்தப்பட்ட சிலிகன் மார்பகங்கள் என்பதுதான்.

2018 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் அந்தப் பெண்மணி காலையில் நடைபயிற்சி செல்லும் வேளையில் அங்கு இருந்தவர்களுள், யார் யாருக்கிடையிலோ உண்டான சண்டையினால் யாரோ ஒருவர் யாரோ ஒருவரை துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டும் என்றும், அந்த குண்டு எதிர்பாராதவிதமாக இப்பெண்ணின் மார்பகத்தை நோக்கிப் பாய்ந்து இருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர் செய்த அதிர்ஷ்டம் அந்த குண்டு செயற்கை மார்பகத்தில் பட்டுத் தெரித்ததாகவும், செயற்கை மார்பகம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நேரடியாக குண்டு மார்பகம் வழியாக நெஞ்சுக்குள் புகுந்து முக்கிய உறுப்புகளை சிதைத்திருக்கும், அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்றும் அந்த மருத்துவர் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்