4 நாள் முழுக்க தூங்கிய பெண்.. "பகல்ல கண் தொறக்குறதே Rare".. வினோத நிலையால் அவதிப்படும் பெண்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நம்மில் பலரும் சில நேரம் தூக்கம் வராமல் அவதிப்படுவோம். இன்னொரு பக்கம் இயல்பாக இருக்கும் சமயத்திலும் தூங்க வேண்டும் என நினைத்துக் கொண்டும் சிலர் இருப்பார்கள்.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | குட்டி யானை இல்ல.. இது 'சிட்டி' யானை.. பிரபல கோயிலில் கலக்கும் ரோபோ யானை..! இவ்ளோ எடையா‌.?

ஆனால், இந்த இரண்டும் இல்லாமல் ஒரு பெண்ணிற்கு உள்ள அரிய நிலை தொடர்பான விஷயம் தான் தற்போது இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.

மேற்கு யார்க்ஷயரின் கேஸ்டில் போர்டு என்னும் பகுதியை சேர்ந்தவர் Joanna Cox. இவருக்கு தற்போது 38 வயதாகும் சூழலில் மிகவும் அரிய Disorder ஒன்றின் காரணமாக சிக்கித் தவித்து வருகிறார். Idiopathic Hypersomnia என்ற அரிய வகை நிலையால் பாடுபட்டு வருகிறார் ஜோயன்னா. இதன் மூலம், ஒரு நாளைக்கு சுமார் 18 முதல் 22 மணி நேரம் வரை தூங்கும் நிலைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

பகல் வேளையிலும் தூக்கம் வர வைக்கும் ஒரு அரிய நிலை தான் ஜோயன்னாவிற்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஒரு முறை பகல் நேரங்களில் அதிகம் விழிக்க முடியாமல் ஜோயன்னா தவித்த சூழலில் ஒருமுறை நான்கு நாட்கள் தொடர்ந்து அவர் தூங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் தான் இப்படி ஒரு நிலை அவருக்கு இருப்பதும் கண்டறியப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த டிஸ்ஆர்டர் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் பகல் நேரம் தூங்குவதுடன் மட்டுமில்லாமல் அதிலிருந்து எழுவதற்கு போராடினாலும் அது முடியாத ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில் ஒரு நாட்களில் இத்தனை மணி நேரம் தூங்குவதால் அந்த நபரை சற்று மனரீதியாகவும், ஓய்வில்லாதது போன்ற ஒரு உணர்வையும் ஏற்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையை கண்டறிவதற்கு முன்பாக அசாதாரண இடங்களான கிளப்பிலும், காரில் இருக்கும் போதும் என ஜோயன்னா தூங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக நான்கு நாட்கள் தொடர்ந்து அவர் தூங்கிய போது உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாததால் அவர் லோ பிளட் சுகர் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

தனக்கு இருக்கும் அரிய நிலை பற்றி பேசும் ஜோயன்னா, தன்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றும், வாகனம் ஓட்டக்கூட முடியவில்லை என்றும் வேதனையுடன் குறிப்பிடுகிறார். அதே போல தூங்கினால் எப்போது எழுந்திருப்பேன் என்பது கூட தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருமுறை பகல் நேரத்தில் 12 மணி நேரம் முழித்து இருந்ததாகவும் அது தான் கடந்த ஆறு, ஏழு வருடங்களில் அதிக நேரம் அவர் முழித்திருந்த தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இதற்கான தீர்வை அவர் கண்டுபிடிப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Also Read | "எப்புடிங்க".. வலையில் சிக்கிய ராட்சத மீன்... மீனவருக்கு அடித்த ஜாக்பாட்.. விலை மட்டும் இவ்ளோ ரூபாய்க்கு போகுமா?!!

WOMAN, SLEEP DISORDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்