பூனையால் வந்த அதிர்ஷ்டம்.. 96 லட்சத்தை வென்ற பெண்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தனது செல்லப் பிராணியான பூனை மீது தவறாக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடந்த பெண்மணிக்கு 96.8 லட்ச ருபாய் இழப்பீடு கிடைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | கிழிஞ்ச ஜீன்ஸ் பாத்திருப்போம்.. இப்படி ஒரு ஷூ-வை பாத்திருக்கீங்களா?.. இதுதான் இப்போ அந்த நாட்டுல ஃபேஷனாம்.. விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!

பூனைகள்

செல்லப் பிராணிகளை வளர்க்கும் பழக்கம் மனிதர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே இருந்ததாக கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பூனைகள், நாய்கள் துவங்கி காட்டு விலங்குகளை கூட செல்லப் பிராணிகளை வளர்ப்போரை நாம் அன்றாடம் சமூக வலை தளங்கள் வாயிலாக கண்டுவருகிறோம். செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பல சிரமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி அமெரிக்காவில் வசித்துவரும் அன்னா டேனியலி என்ற பெண்மணிக்கும் தனது செல்லப் பூனையான மிஸ்காவின் மூலமாக ஒரு சிக்கல் வந்திருக்கிறது. ஆனால், அதுவே இப்போது அவருக்கு அதிர்ஷ்டத்தையும் வழங்கியிருக்கிறது.

அபராதம்

இந்த மிஸ்கா என்னும் பெயர்கொண்ட பூனை சாலைகளில் அத்துமீறி சுற்றித் திரிவதாகவும், சில விலங்குகளை அது காயப்படுத்தியதாகவும் நீதிமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு புகார் அளித்திருக்கிறார்கள் அன்னாவின் அண்டை வீட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அன்னாவிற்கு 25,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 20.2 லட்ச ரூபாய்) அபராதம் விதித்ததோடு, அத்துமீறி சுற்றித் திரிந்த மிஸ்காவையும் கைப்பற்றி விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்கு சென்றிருக்கிறார் அன்னா. இந்த வழக்கு விசாரணை 3 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், மிஸ்கா அத்துமீறி சாலைகளில் சுற்றித் திரிந்ததற்கான மற்றும் பிற விலங்குகளை தாக்கியதற்கான சாட்சிகள் இல்லை என நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.

96.8 லட்சம்

இந்நிலையில், 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அன்னாவிற்கு 125,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 96.8 லட்ச ரூபாய்) இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தற்போது பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார் அன்னா. இந்த மூன்று வருட போராட்டத்தில் இறுதியாக தான் வெற்றிபெற்றுவிட்டதாக அன்னா மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

தனது பூனை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக நீதிமன்ற மேல்முறையீடு செய்த அன்னாவிற்கு 96.8 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

WOMAN, CAT, பூனைகள், செல்லப் பிராணி, அபராதம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்