30 வருடங்களுக்கு முன் காணாமல் போன பெண்.. இறந்ததாக நினைத்த போது.. உயிருடன் கிடைத்த பரபர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் ஒருவர், இறந்து போனதாக கருதப்பட்டு வந்த சூழலில் தற்போது அவரை பற்றி கிடைத்துள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                                  Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

பாட்ரிசியா கோப்தா என்ற பெண்ணுக்கு தற்போது 82 வயதாகிறது. இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு, பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பார்க் என்னும் பகுதியில் கடைசியாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, நீண்ட நாட்களாக அவரை பற்றி கண்டுபிடிக்க தவறியதால் அவர் இறந்து விட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கையில் தான், பாட்ரிசியா குறித்து தற்போது சில தகவல்கள் வெளி வந்துள்ளது. முன்னதாக, கடந்த 1999 ஆம் ஆண்டு வடக்கு போர்ட்டோ ரிக்கோ பகுதியில் உள்ள தெருக்களில் அவர் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காணாமல் போன பெண்

தன்னுடைய சொந்த ஊரில் ஒரு காலத்தில் தெருவில் பிரசங்கம் செய்வதில் பாட்ரிசியா அறியப்பட்டதாக கூறப்படும் சூழலில் காணாமல் போன காலகட்டத்தின் ஆரம்பத்தில் அவர் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் இருந்த போது தனது கடந்த கால வாழ்க்கையை ரகசியமாக வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners

அதே வேளையில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாட்ரிசியா தனது வாழ்க்கை குறித்த விவரங்களையும் வெளியிட தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே சுமார் 30 ஆண்டுகள் கழித்து கரிபியன் தீவில் உள்ள முதியோர் இல்லத்தில் அவர் வசிப்பது குறித்த தகவலும் கிடைத்துள்ளது.

மேட்ச் ஆன டிஎன்ஏ

நர்சிங் ஹோமில் உள்ள ஊழியர்கள் பென்சில்வேனியா அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு டிஎன்ஏ மாதிரிகள் அடையாளத்தின் மூலம் அவர் பாட்ரிசியா தான் என்பதை உறுதிப்படுத்த முடிந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. செய்தியில் அவர் பாட்ரிசியா என்பதும் உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners

முன்னதாக பென்சில்வேனியாவில் பாட்ரிசியா இருந்த சமயத்தில் அவருக்கு ஒரு சில நோய்களின் அறிகுறிகள் இருந்த சூழலில் பிரம்மைகள் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் இருக்கும் படி அவரை மருத்துவர்கள் அறிவுறுத்திய சூழலில், அதன் பேரில் கவலை கொண்ட பாட்ரிசியா நாட்டை விட்டு வெளியேறவும் முடிவு செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியில் உறைந்த சகோதரி

Images are subject to © copyright to their respective owners

முன்னதாக பார்ட்டிசியாவின் கணவர் பாப் கோப்தா அவர் காணாமல் போன 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருந்தாலும் மனைவி காணாமல் போன பிறகு பால்கோபக்தா மறுமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. இரண்டு தங்கைகள் உள்ள சூழலில் ஒருவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும் மற்றொரு தங்கையான குளோரியா ஸ்மித் தனது சகோதரி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

WOMAN, MISSING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்