‘காதலருக்கு வந்த நோட்டிபிகேஷன்!’.. 'கேமராவில் சிக்கிய வீடியோவால்'.. பெண்ணுக்கு நடந்த மரண பங்கம்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

யாருமில்லை என நினைத்துக் கொண்டு மேஜை மீது ஏறிக்கொண்டு மியூசிக் ஒலிக்கவிட்டு Maddie Hackett டான்ஸ் ஆடிக் கொண்டிருந்திருக்கிறார்.

இது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என Maddie Hackett நினைத்திருக்கக் கூடும். ஆனால், அவருடைய காதலர்,  அவர் போட்ட ஆட்டத்தை டிக்டாக் வீடியோவாக பதிவு செய்ததை அடுத்து, இந்த வீடியோவை பார்த்த பலரும் இதனை கலாய்த்து வருகின்றனர். Maddie Hacketty தனது இந்த வீடியோவை தமது டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார்.

அதில்,  “காதலருக்கு Furbo எனும் செல்லப்பிராணிகள் கண்காணிப்பு கேமராவில் இருந்து வந்த நோட்டிபிகேஷன் (அந்த வீடியோ) ஆனால் உண்மையில் செல்லப்பிராணிகளுக்காக இசை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தபோது” என்கிற கேப்ஷனை பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே Maddie Hacketty-ன் காதலர்  “எங்கள் வீட்டு செல்லப்பிராணிகள் உனது இசைக்கச்சேரியை மிஸ் பண்ணுகின்றன” என பங்கமாக கலாய்த்துள்ளார். Maddie Hacketty ஆட்டம் போடும் இந்த வீடியோவை திடீரென பார்த்துவிட்ட அந்த ஏரியா கவுன்சிலர் ஒருவர், தான் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தப் போனதாகவும், ஆனால் இந்த பெர்ஃபார்மென்ஸை பார்த்துவிட்டு, அவசரத்தில் நோட்புக் ஒன்றினை பற்றவைத்துவிட்டதாகவும் கூறி கொளுத்திப் போட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்