15 வருஷத்துக்கு முன்னாடி மரணமடைந்த கணவருடைய குரலை கேட்க, தினமும் சுரங்க ரயில் நிலையத்துக்கு செல்லும் மனைவி.. உருகவைக்கும் காதல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் மறைந்த தனது கணவருடைய குரலை கேட்க, தினமும் சுரங்க ரயில் நிலையத்துக்கு செல்வது பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | அமெரிக்காவின் பயங்கரமான அம்யூஸ்மென்ட் பார்க்.. 50 வருஷமா உள்ள போகவே பயப்படும் மக்கள்.. திகிலூட்டும் பின்னணி..!

இங்கிலாந்தில் உள்ள லண்டனில் வசித்துவருகிறார் மார்கரெட் மெக்கல்லம். இவருடைய கணவர் ஆஸ்வால்ட் லாரன்ஸ். இவர் ரயில் நிலையங்களில் பயணிகளின் எச்சரிக்கை வாசகங்களை வாசிக்கும் வேலையில் இருந்திருக்கிறார். 1950 களில் ரயில்வே நிலையங்களில் "தண்டவாளங்களுக்கு அருகே யாரும் நிற்கவேண்டாம், ரயில் வரப்போகிறது" என்ற எச்சரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. ஒலிப் பெருக்கிகளில் தினந்தோறும் ஒலிக்கும் இந்த குரல் லாரன்சுடையது. இந்நிலையில், தனது 86 வயதில் லாரன்ஸ் 2007 ஆம் ஆண்டு மரணமடைந்திருக்கிறார்.

சோகம்

கணவர் லாரன்ஸ் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்த மார்கரெட், தினந்தோறும் அவரது குரலை கேட்க முடிவெடுத்திருக்கிறார். இதன் காரணமாக லண்டனில் உள்ள Embankment station -க்கு தினமும் செல்லும் மார்கரெட், அங்கு லாரன்ஸின் குரலில் ஒலிக்கும் எச்சரிக்கை வாசகங்களை கண்ணீரில் கரைந்தபடி கேட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஒருநாள் அந்த ரயில் நிலையத்தில் டிஜிட்டல் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக லண்டன் முழுவதும் ரயில் நிலையங்களில் அந்த டிஜிட்டல் எச்சரிக்கை வாசகங்கள் வைக்கப்பட்டதை அறிந்த மார்கரெட், நொறுங்கிப்போயிருக்கிறார். இதனால் ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் நேரில் சென்று தனது கதையை கூறி, லாரன்ஸின் குரலை கேட்க வாய்ப்பு தாருங்கள் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

கலங்கிப்போன அதிகாரிகள்

மார்கரெட் வைத்த கோரிக்கையை கண்டு கலங்கிப்போன அதிகாரிகள், லாரன்ஸ் குரல் பதிவை மார்கரெட்டிடம் வழங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது  Embankment station -ல் மட்டும் லாரன்ஸ் குரலிலேயே பழைய முறைப்படி எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பெருமகிழ்ச்சியடைந்த மார்கரெட் இப்போதும் தனது கணவரின் குரலை கேட்க,  Embankment station க்கு சென்று வருகிறார். இங்கிலாந்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த கணவரின் குரலை கேட்பதற்காக சுரங்க ரயில் நிலையத்துக்கு மூதாட்டி சென்றுவருவது பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

Also Read | ட்விட்டர் ஊழியர்களுக்கு வந்த மெயில்.. அடுத்த வாரம் எலான் மஸ்க் செய்ய இருக்கும் சம்பவம்?.. முழு விபரம்.!

WOMAN, UNDERGROUND STATION, HUSBAND VOICE, மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்