தான் பிறந்த கருவிலேயே குழந்தை பெற்றெடுக்க முடிவெடுத்த பெண்?!.. சாத்தியமா? வியக்க வைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெண் ஒருவர் குழந்தை பெறும் வாய்ப்பை இழந்த நிலையில், அவருக்காக அவரது தாய் செய்ய முன் வந்துள்ள காரியம், கடும் நெகிழ்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் Kirsty Bryant. இவருக்கு தற்போது 29 வயதாகிறது.

இதனிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த கிர்ஸ்டிக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அதாவது பிரசவத்தின் போது கிர்ஸ்டிக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவரது கருப்பையை அகற்ற வேண்டும் என்ற நெருக்கடியும் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால், அவசர அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கிர்ஸ்டியின் கருப்பையையும் மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் கூட கிர்ஸ்டிக்கு இல்லாமல் போயுள்ளது. அப்படி இருக்கையில், இரண்டாவதாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஏங்கி வந்துள்ளார் கிர்ஸ்டி.

ஆனாலும், அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதால் வேறு வழிகளையும் கிர்ஸ்டி தேடி பார்த்துள்ளார். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பல நாடுகளில் சட்டபூர்வமாக இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவில் நிறைய விதிமுறைகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல குழந்தை தத்தெடுப்பதிலும் நிறைய கடினமான வழிமுறைகள் இருப்பதை கிர்ஸ்டி உணர்ந்துள்ளார்.

அப்படி ஒரு வேளையில் தான், கிர்ஸ்டியின் தாயார் மிச்செல், மிகவும் துணிச்சலான முடிவுடன் தற்போது முன் வந்துள்ளார். முன்னதாக, கருப்பை மாற்று அறுவை சிகிச்சை பற்றி பல நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் கிர்ஸ்டி.

இதன் பின்னர், தனது தாயான மிச்செல்லிடம் பேசிய கிர்ஸ்டி, "உங்களின் கருப்பையை நீக்கி, அதனை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நான் பெற்றுக் கொண்டு குழந்தை சுமந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?" என கேட்டுள்ளார். இதற்கு தாய் மிச்செல், தாராளமாக உனக்கு அது தான் தேவை என்றால் நான் உதவி செய்கிறேன் என்றும் திடமான முடிவை எடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் மகளின் ஆலோசனையால் தாய் மிச்செல் சற்று அதிர்ச்சி அடைந்தாலும், தனது மகள் மீண்டும் தாய் ஆவதை பார்க்க முடியும் என்ற விஷயத்தில் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளார். அப்படி இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தால், கிர்ஸ்டி பிறந்த அதே கருவில் இருந்து ஒரு குழந்தையை அவரால் பெற்றுக் கொள்ள முடியும்.

உலகளவில் இதுவரை சுமார் 70 கருப்பை மாற்று அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், 40 க்கும் மேற்பட்டோருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும், கிர்ஸ்டி விஷயத்திலும் விரைவில் இதற்கான அறுவை சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

MOTHER, DAUGHTER, PREGNANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்