"குழந்தையே பிறக்காதுன்னு நெனச்சிட்டு இருந்த பெண்ணுக்கு.. 11 வது மாசத்தில், 11 ஆம் தேதியில் பிறந்த 11 ஆவது குழந்தை!!
முகப்பு > செய்திகள் > உலகம்அடிக்கடி இணையத்தில் நிறைய செய்திகள் அதிகம் வைரல் ஆகி மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
Also Read | "இப்டி தான் அன்னைக்கி ராத்திரி சண்டை நடந்துச்சு".. ஷ்ரத்தா கொலை வழக்கில் பகீர் கிளப்பிய அஃப்தாப்!!
மேலும் இப்படி அதிகம் பகிரப்படும் செய்திகள், வித்தியாசமாகவோ அல்லது மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையிலோ இருக்கும் பட்சத்தில் ஒருவித தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்க வாய்ப்புள்ளது.
அந்த வகையில், தற்போது அதிகம் பேசு பொருளாக மாறி வரும் செய்தி, பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் Satu Nordling Gonzalez. இவரது கணவர் பெயர் Andreas. முன்னதாக, Satu-வுக்கு 21 வயதாக இருந்த சமயத்தில் அவர் முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், அவரது கருப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அவரது கரு கலைந்து போனதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மனஅழுத்தம் காரணமாக அவரது கருமுட்டை வெளியேறுவதும் நின்று போனதாக தெரிகிறது.
இனிமேல் சதுவால் குழதை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் என்றும், தன்னால் இனிமேல் தாயாக முடியாது என்றும் நினைத்து மனவேதனை அடைந்துள்ளார். ஆனால், அப்படி இருக்கையில், இரண்டு ஆண்டுகள் கழித்து, அதாவது 2008 ஆம் ஆண்டில் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார் சது நார்ட்லிங். இந்த முறை குழந்தையும் பிறந்துள்ளதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் சது மற்றும் அவரது கணவர் திளைத்து போயுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது இந்த தம்பதியினருக்கு 6 பெண் குழந்தைகள் மற்றும் 5 ஆண் குழந்தைகள் என மொத்தம் 11 பிள்ளைகள் உள்ளனர். தன்னிடம் உள்ள பிரச்சனைகள் காரணமாக குழந்தையே கிடைக்காது என வேதனைப்பட்ட பெண்ணுக்கு 11 குழந்தைகள் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இதில், இன்னொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், சதுவுக்கு கடந்த சில தினங்கள் முன்பு பிறந்த 11 வது குழந்தை, சரியாக 11/11/2022 என்ற தேதியில் பிறந்துள்ளது தான். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் சது நார்ட்லிங். மேலும், மூத்த பிள்ளைக்கு 14 வயதாகும் நிலையில், சமீபத்தில் பிறந்த குழந்தைக்கு முன்பு 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
குழந்தையே கிடைக்காது என கருதிய பெண்ணிற்கு, 11 ஆவது மாதத்தில் 11 ஆம் தேதியில், 11 ஆவது குழந்தை பிறந்துள்ள விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | "எதுக்கு இவ்ளோ பிரேக்?".. ராகுல் டிராவிட் விஷயத்தில் ரவி சாஸ்திரி சொன்ன பரபரப்பு கருத்து!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பையன எப்படியாச்சும் ஆர்மி ஆபிஃசர் ஆக்கணும்".. பிரிந்து சென்ற கணவர்.. மகனுக்காக பெண் எடுத்த முடிவு!!.. நெகிழ்ச்சி பின்னணி!!
- இளம்பெண்ணைக் கொன்று.. சமூக வலைத்தளத்தில் வீடியோ பகிர்ந்த வாலிபர்..!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!
- இறந்த பெண்ணின் உடலுடன் 3 நாட்கள் இருந்த குடும்பம்.. காரணத்த கேட்டு நடுங்கிய அக்கம் பக்கத்தினர்!!
- காதல் திருமணம் முடிஞ்சு 10வது நாள்.. தாய் வீட்டிற்கு வந்த பொண்ணுக்கு நேர்ந்த துயரம்!!
- 3 வது முறை கர்ப்பம்.. பிரசவத்துக்கு அழைத்து சென்ற குடும்பம்.. செக்கப்க்கு முன் இளம்பெண் போட்டுடைத்த உறையவைக்கும் உண்மை.!
- "என்னை கல்யாணம் செஞ்சுக்க..இல்லைன்னா".. தோழியின் வீட்டில் ரகளை செய்த இளம்பெண்.. குழம்பிப்போன குடும்பத்தினர்.!
- ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த மனைவி.! கண்டித்தும் கேட்காததால் கணவர் செய்த பகீர் காரியம்..?
- அம்மாவ விட பெரிய சக்தி இல்ல.. நெகிழ வைத்த மனிதாபிமானம்.. KGF பட பாணியில் ஒரு ரியல் சம்பவம்.. வீடியோ..!
- "அவரு கியர் மாத்துற ஸ்டைல் இருக்கே".. கார் டிரைவர் மீது பணக்கார பெண்ணுக்கு மலர்ந்த காதல்.. Viral ஆகும் Couple
- ஆன்லைனில் பழக்கம்.. இளம்பெண்ணுடன் லாட்ஜில் தங்கிய 52 வயசு நபர்.. அடுத்தநாள் காலியாக கிடந்த நகைப்பை.. கன்னியாகுமரியில் பரபரப்பு..!