ஆபிஸ்ல Friendly-ஆ கட்டிப்பிடிக்கும்போது துடித்த பெண்.. வலி தாங்க முடியாம ஹாஸ்பிடல் போனப்போ தான் விபரம் தெரிஞ்சிருக்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அலுவலகத்தில் சக ஆண் ஊழியரை கட்டிப்பிடித்த போது, பெண் ஒருவரின் விலா எலும்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயம் நீதிமன்றம் வரையில் சென்றிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "ஒருவேளை அதுநடந்தா பூமியில பாதிபேர் இருக்கமாட்டாங்க'.. வெளியான ஆய்வுக்கட்டுரை.. வெலவெலத்துப்போன உலக நாடுகள்..!

அலுவலகம்

அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அறிமுகமானவர்களை அணைத்துக்கொள்ளும் வழக்கம் வெளிநாடுகளில் வழக்கமான ஒன்றுதான். ஆனால், சீனாவை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவருக்கு இதுவே பிச்சனையாகி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார். இது உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள யுயாங் நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அருகில் இருக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது சக பணியாளர் ஒருவருடன் உரையாடியிருக்கிறார். அப்போது சகஜமாக ஒருவரை ஒருவர் அணைத்திருக்கின்றனர். அப்போது அந்த ஆண், பெண் ஊழியரை இறுக்கமாக கட்டிப்பிடித்திருக்கிறார்.

வலி

இதனையடுத்து வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு மார்பு மற்றும் இடுப்பில் வலி ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சில எண்ணெய்களை அவர் தேய்த்து வந்திருக்கிறார். ஆனால், வலி விட்டபாடில்லை. ஒருகட்டத்தில் அவரால் வலியை தாங்கிக்கொள்ள முடியாததால் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் அந்த பெண். அப்போது, அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டிருக்கிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலப்பக்க மார்பு எலும்புகளில் இரண்டும் இடது பக்க மார்பு எலும்புகளில் ஒன்றிலும் கிராக் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

இழப்பீடு

இதனையடுத்து அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்ட அந்த பெண் ஊழியர் தனது சிகிச்சையை தொடர்ந்திருக்கிறார். இதனிடையே அந்த ஆண் ஊழியரை சந்தித்து தனது விடுமுறை காரணமாக ஏற்படும் சம்பள பிடித்தம் மற்றும் சிகிச்சைக்கு ஆகும் செலவு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், அந்த ஆண் மறுப்பு தெரிவிக்கவே நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார் பெண். இந்த வழக்கு குறித்த விசாரணை யுன்க்சி மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த ஆண் பணியாளர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ 1.16 லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | அதிமுக: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்.. நீதிபதி வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

CHINA, WOMAN, COLLEAGUE, HUGGING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்