நைட்டு 10.30 மணி... கண்ணு முழிச்சு பார்த்தா ஜன்னல் வழியா கண்ட காட்சி.. பதைபதைத்து போன பெண்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் இரவு நேரத்தில் பெண் ஒருவரின் வீட்டுக்குமுன் திடீரென திரண்ட அமெரிக்கர்களால் அந்தப்பெண் அடைந்த குழப்பம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | பெற்ற தாயைக் கொன்றுவிட்டு பிரதமரைக் கொல்லப் புறப்பட்ட கனடா நடிகர்.. காரணத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நீதிமன்றம்.!

ஸ்காட்லாந்தில் இருக்கும் கிளாஸ்கோ நகரில் வாழ்ந்து வருபவர் லன்னா டோல்லண்ட் (Lanna Tolland). இவர் தம்முடைய வீட்டில் சோபாவில் ஹாயாக அமர்ந்திருக்கிறார். அப்போது வீட்டுக்குள் தனியாக ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்த லன்னா டோலண்ட்.. அவருக்கு, திடீரென்று ஏதோ சத்தம் கேட்க அந்த சலசலப்பு சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை நோக்கி சென்று இருக்கிறார்.

அப்போதுதான் அவருடைய வீட்டுத் தோட்டத்துக்குள் சில அமெரிக்கர்கள் நுழைந்து வருவதைப் பார்த்து, அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே கண்விழி பெருக்கெடுத்து அவர்களை பார்த்த லன்னா டோல்லண்ட், இந்த அமெரிக்கர்கள் எதற்காக தம்முடைய வீட்டு தோட்டத்தில் திடீரென்று நுழைகிறார்கள் என்பது பற்றி புரியாமல் ஒருகணம் திகைத்துப் போய் இருக்கிறார்.

அவர்களோ லன்னா டோல்லண்டை பார்த்து கையசைத்ததுடன், அவருடைய வீட்டின் முன் நின்று புகைப்படங்கள் எடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.  “இது என்னடா வம்பா போச்சி”.. இரவு பத்து முப்பது மணிக்கு, முன்பின் தெரியாதவர்கள் அதுவும் அமெரிக்கர்கள் திடீரென வீட்டுக்கு முன் கூடியது மட்டுமல்லாமல், வீட்டுக்கு முன்பாக நின்று புகைப்படங்கள் எடுக்க தொடங்கி விட்டார்களே.. யார் இவர்கள் என்று லன்னா டோல்லண்ட் சந்தேகிக்கிறார்.

உடனே ஜன்னலைத் திறந்து அவர்களிடம் நேரடியாக கேட்டு விடலாம் என்று முடிவு செய்த லன்னா டோல்லண்ட், அவர்களிடம் பேச தொடங்கி இருக்கிறார். இங்கே எதற்காக நிற்கிறீர்கள்? யார் நீங்க எல்லாம்? இங்கே என்ன செய்கிறீர்கள் என்று அவர்களை பார்த்து ஜன்னல் வழியே கேட்டிருக்கிறார். அப்போதுதான் அந்த அமெரிக்கர்கள் பதில் கூறி இருக்கின்றனர். அந்த பதிலைக் கேட்ட பிறகுதான் நிம்மதி அடைந்து இருக்கிறார்.

ஆம், அந்த அமெரிக்கர்கள் கூறிய பதில் என்னவென்றால் இந்த வீடு தங்களுடைய மூதாதையர்களுக்கு சொந்தமாக இருந்த ஒரு வீடு என்றும், அவர்கள் ஒரு காலத்தில் இங்கு தான் வாழ்ந்தார்கள் என்றும், எனவே அவர்களுடைய நினைவாக இந்த வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்ப்பதற்காக வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நினைவாக புகைப்படமும் எடுத்துக் கொள்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இதைக் கேட்ட லன்னா பெருமூச்சு விட்டிருக்கிறார். உடனே அதற்கென்ன .. போட்டோ தானே.. எடுத்துக் கொள்ளுங்கள் என்று புன்னகைத்தபடி சொல்லிவிட்டு, அவர்கள் புகைப்படம் எடுப்பதை புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்தை தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இது பற்றி குறிப்பிட்டிருக்கிறார் லன்னா. அவ்வளவுதான் இந்த பதிவு வைரலாக போக ஆரம்பித்துவிட்டது.

Also Read | 40 வருஷமா செப்டிங் டேங்கில் மனைவியின் உடலை வைத்த 89 வயது கணவர்..? பரபரப்பு சம்பவம்.!

LANNA TOLLAND, BRITAIN, AMERICANS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்