மூழ்கிப்போன டைட்டானிக் கப்பலை பார்க்கணும்.. 30 வருஷமா காத்திருந்த பெண்.. படிச்சது, சம்பாதிச்சது எல்லாம் அதுக்காக தான்.. மிரளவைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடலில் மூழ்கிப்போன டைட்டானிக் கப்பலை பார்க்க வேண்டும் என்பதற்காக 30 வருடங்கள் காத்திருந்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் பெண் ஒருவர்.

Advertising
>
Advertising

Also Read | உலகத்துலயே வயசான டாக்டர்.. இப்பவும் நோயாளிகளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்குறாரு.. பிரம்மித்துப்போன கின்னஸ் அதிகாரிகள்..!

டைட்டானிக்

கடந்த 1915 ஆம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு கிளம்பியது டைட்டானிக். பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கிப்போன இந்த கப்பலில் சுமார் 2200 பேர் பயணித்தனர். கப்பல் விபத்திற்கு உள்ளானதில் சுமார் 1000 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. இன்று வரை டைட்டானிக் மூழ்கிப்போன வட அட்லாண்டிக் பகுதி ஆராய்ச்சியாளர்களுக்கு பல சவால்களை விடுத்துவருகிறது. டைட்டானிக் கப்பலில் இருக்கும் பொருட்கள் குறித்த ஆராய்ச்சி பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

கனவு

இந்நிலையில், மூழ்கிப்போன டைட்டானிக் கப்பலை பார்க்க வேண்டும் என ஒருபெண்மணி கடந்த 30 வருடங்களாக காத்திருந்திருக்கிறார். ரெனாடா (Renata) எனும் அந்த பெண்மணிக்கு சிறுவயதில் இருந்தே, டைட்டானிக் கப்பலை பற்றிய ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில், டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, அதனை கண்டறியவேண்டும் என்பதற்காகவே கல்லூரியில் கடல்சார் அறிவியல் பிரிவை தெர்ந்தெடுத்திருக்கிறார் ரெனாடா.

ஆனால், அவர் கல்லூரியில் சேர்ந்த அடுத்த வாரம், டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இருக்கும் இடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அவரது கனவுகள் நொறுங்கிப்போயின. அதன்பிறகு வங்கிக்கு வேலைக்கு செல்வது நோக்கி தனது கவனத்தை திரும்பியிருக்கிறார் ரெனாடா. ஆனாலும், அவருடைய சிறுவயது கனவை அவர் விட்டுவிடவில்லை.

பயணம்

இந்நிலையில், ஓஷன்கேட் எனும் நிறுவனம் டைட்டானிக் சிதைவுகள் இருக்கும் இடத்திற்கு மக்களை அழைத்துச் செல்வது குறித்து அறிந்திருக்கிறார் ரெனாடா. சுமார் 12,600 அடி ஆழத்தில் இருக்கும் கப்பலை பார்க்க 2,50,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்) கட்டணமாக செலுத்தியிருக்கிறார் ரெனாடா. இதற்காக சிறுவயதில் இருந்த பணம் சேர்த்து வந்ததாகவும், தன்னிடம் கார் கூட இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும் பணத்தினை சேகரிக்க திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் அவர்.

சுமார் 30 ஆண்டுகளாக ரெனாடா காத்திருந்த பயணம் சமீபத்தில் நடந்திருக்கிறது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இவருடைய காத்திருப்பு குறித்து அறிந்த மக்கள் அவரது கனவுகளுக்காக போராடும் குணத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Also Read | சொந்த காசுல Foriegn போன பாட்டி.. 65 வருஷ கனவை நிறைவேற்றிய நிஜ சிங்கப்பெண்.. நெகிழ்ச்சி தருணம்

WOMAN, VISIT, TITANIC WRECKAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்