கல்லறை அருகே பெண் எடுத்த புகைப்படம்.. கொஞ்ச நாள் கழிச்சு Zoom பண்ணி பாக்குறப்போ.. உள்ள தெரிஞ்ச 'மர்ம' உருவம்??
முகப்பு > செய்திகள் > உலகம்வரலாற்று சிறப்புமிக்க கல்லறை ஒன்றில், பெண் ஒருவர் புகைப்படம் எடுத்த நிலையில், அதனை பின்னர் பார்த்த போது, கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இங்கிலாந்து நாட்டின் Sunderland என்னும் பகுதியை சேர்ந்தவர் மாண்டி ஸ்டீல். இவர் தனது மகளுடன் North Tyneside பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கோட்டை ஒன்றிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது தனது கேமராவை பயன்படுத்தி அப்பகுதியில் இருந்த கல்லறை உள்ளிட்ட இடங்களை மாண்டி சில புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
தொடர்ந்து, தான் அந்த கோட்டை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கல்லறையை சுற்றி எடுத்த புகைப்படங்களை பார்த்த போது, கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்துள்ளது. இதற்கு காரணம், அவர் எடுத்த புகைப்படம் ஒன்றில், தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு குடும்பத்திற்கு பின்னால், ஒரு பழங்கால உடை அணிந்த படி தொப்பி வைத்துக் கொண்டு ஒரு பெண் உருவம் தெரிந்தது தான்.
தொடர்ந்து, மற்ற அனைத்து புகைப்படங்களையும் பார்த்த மாண்டி, அப்படி ஒரு உடையணிந்து ஒரு பெண் நிற்பதைக் காண முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே போல, அந்த பகுதியில் புகைப்படங்கள் எடுத்த போது, அபப்டி உடையணிந்த பெண்ணை எங்கேயும் தான் பார்க்கவில்லை என்றும் மாண்டி கூறி உள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தொடர்ந்து பேசும் மாண்டி, "இது மிகவும் விசித்திரமான ஒன்று. ஏனென்றால், எனது மகளும் அதே பகுதியில், நான் புகைப்படம் எடுத்த நேரத்தில் தான் என்னுடன் சேர்ந்து எடுத்தார். ஆனால், அவரது மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அப்படி எந்த உருவமும் அந்த இடத்தில் தெரியவில்லை. அப்படி ஒரு உடை யாராவது அணிந்திருக்கிறார்களா என அனைத்து புகைப்படத்தையும் நான் பார்த்தேன். ஆனால், அப்படி யாருமே அங்கு இல்லை. இது யார், என்ன என்றே எனக்கு தெரியவில்லை" என மாண்டி கூறி உள்ளார்.
மாண்டி சொல்லும் மர்ம புகைப்படத்தின் படி, பெண் ஒருவர் கோட் மற்றும் தொப்பி அணிந்தபடி, குன்றின் அருகே நிற்பது போல தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், இதே கோட்டையை சுற்றியுள்ள ஒரு பகுதியில், அமானுஷ்ய ஆய்வாளர் ஒருவர் எடுத்த புகைப்படம் ஒன்றில் இது போன்ற விசித்திரமான உருவம் இருந்தது தொடர்பான செய்தி, அந்த சமயத்தில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எங்களுக்குள்ள 32 வயசு வித்தியாசம் இருக்கு".. மகளின் காதல் அறிந்து பெற்றோர் செய்ய முயன்ற விஷயம்.. கடைசியில் நடந்தது என்ன??
- காதல் செய்ததால் குடும்பத்தை பிரிந்த பெண்.. 56 வருஷம் கழிச்சு நடந்த எமோஷனல் சம்பவம்!!
- 100 வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி.. வேகமா வந்து விலங்கு மாட்டிய போலீஸ்.. "இப்படி கூட Arrest பண்ணுவாங்களா??"
- ஆபரேஷன் முடிஞ்சதும் கெடச்ச கண் பார்வை.. "முதல் முறையா காதலன பாத்ததும்".. இளம்பெண் சொன்ன விஷயம்
- "ஆண் குழந்தை பிறக்கணும்னா அருவிக்கு போய்".. மந்திரவாதியால் பெண்ணுக்கு நடக்க இருந்த பயங்கரம்.. கணவரின் குடும்பத்தினர் செய்த அதிர்ச்சி காரியம்!!
- வழக்கமா லாட்டரி வாங்கும் பெண்.. இந்த முறை செய்த புது விஷயம்.!.. "அடுத்த சில நாள்லயே".. காலிங் பெல்லை அடித்த அதிர்ஷ்டம்.!
- Interview'ல பெண்ணிடம் கேட்கப்பட்ட ஒரு 'கேள்வி'.. இழப்பீடு வழங்கிய பிரபல பீட்சா நிறுவனம்!.. "அப்படி என்ன கேட்டாங்க?"
- 30 நிமிஷம்.. கடற்கரை வெயிலில் தூங்கிய பெண்.. "எந்திரிச்சு கண்ணாடி'ல மூஞ்ச பாத்ததுக்கு அப்புறம்".. ஒரு கணம் அப்படியே ஆடி போய்ட்டாங்க
- திருமண அழைப்பிதழில் இருந்த Website.. "இத எதுக்குங்க இங்க போட்டு வெச்சு இருக்கீங்க??" அதிர்ந்த நெட்டிசன்கள்
- ஒரேநாள்ல 512 போன்கால்.. அதுவும் ஒரே பெண்கிட்ட இருந்து .. கடுப்பான காவல்துறை.. கடைசியா போன் பண்ணி அந்த பெண் சொன்ன விஷயம் இருக்கே..!