உக்ரைனில் இருந்து காதலன் அனுப்பிய புகைப்படம்.. கொஞ்ச நாளில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் வாழ்ந்து வருபவர் ரேச்சல் எல்வெல் (Rachel Elwell). இவருக்கு தற்போது 54 வயது ஆவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், சமீபத்தில் இவருக்கு விவாகரத்து ஆனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து, தனிமையில் வாழ்ந்து வந்த ரேச்சலுக்கு பேஸ்புக் மூலம் ஸ்டீபன் பேரியோ (Stephen Bario - வயது 54) என்ற நபருடன் அறிமுகம் கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ரேச்சல் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் சமூக வலைத்தளம் மூலம் மணிக்கணக்கில் உரையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஒரு ப்ராஜெக்ட்டிற்காக உக்ரைன் செல்வதாகவும் ரேச்சலிடம் கூறி உள்ளார் ஸ்டீபன்.

இதன் பின்னர், சில நாட்களுக்கு பிறகு உக்ரைன் எண்ணில் இருந்தும் ரேச்சலை அழைத்து ஸ்டீபன் பேச துவங்கியதாக தகவல்கள் கூறுகின்றது. ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமல், ரேச்சல் மற்றும் ஸ்டீபன் ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், ஒரு நாள் ரேச்சலை அழைத்த ஸ்டீபன், உக்ரைனில் தன்னை ஒரு கூட்டம் கடத்தி வைத்திருப்பதாகவும் பணம் கொடுத்தால் தான் தன்னை விடுவிப்பதாகவும் பத்தற்றட்டத்துடன் கூறி உள்ளார்.

அதே போல, பின்னணியில் சிலர் ஸ்டீபனை மிரட்டுவது போல, ஸ்டீபன் கட்டி போடப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று ரேச்சலுக்கு கிடைத்ததாக தகவல்கள் கூறுகின்றது. காதலன் ஸ்டீபனுக்கு நேர்ந்த நிலையை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரேச்சல், உடனடியாக கொஞ்சம் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார். சுமார் 99,000 பவுண்டுகள் வரை ரேச்சல் அனுப்பி வைத்துள்ள நிலையில், இதன் பின்னர் பேசிய ஸ்டீபன், இங்கிலாந்து வந்து தன்னை சந்திப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறி உள்ளார்.

இந்த நிலையில், ஒரு முகவரியை ஸ்டீபன் கொடுக்க, அதனை நம்பி நேரில் போன ரேச்சலுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அந்த முகவரியில், ஸ்டீபனுக்கு பதிலாக ஒரு பெண் தான் இருந்துள்ளார். அங்கே ஸ்டீபன் என யாரும் இல்லாத நிலையில், சந்தேகம் ஏற்பட போலீசாரிடம் ரேச்சல் புகாரளித்துளளார். அந்த சமயத்தில், ஒரு அதிர்ச்சியான உண்மை பற்றியும் ரேச்சலுக்கு தெரிய வந்துள்ளது. ரேச்சலுக்கு ஸ்டீபன் என்ற பெயரில் வந்த புகைப்படம், ஸ்பெயின் புகைப்பட கலைஞர் ஒருவருடையது என்பதும், ஸ்டீபன் என்ற பெயரில் பல பெண்களை ஒருவர் மோசடி செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.

அந்த நபர் பணம் கேட்டதும் தன்னிடம் இல்லாத காரணத்தினால், கிரெடிட் கார்டு மற்றும் கடன் வாங்கியும் தான் ரேச்சல் பணம் அனுப்பி கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ரேச்சல் திகைத்து போயுள்ள நிலையில், இதற்கு காரணமான நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

LOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்