VIDEO: ‘சிங்கப்பெண்ணே... சிங்கப்பெண்ணே..’ இந்த பாட்டு 100% இந்த பொண்ணுக்கு தான் கரெக்ட்டா இருக்கும்.. அல்லு விட வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாய்க்குட்டியை தூக்கிச் செல்வது போல சிங்கக்குட்டியை தூக்கிச் சென்ற இளம்பெண்ணின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

குவைத் நாட்டின் சல்மியா நகரின் வீடு ஒன்றில் சிங்கக்குட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அந்த சிங்கக்குட்டி வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளது. உடனே இதுகுறித்து குட்டியின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அந்த சிங்கக்குட்டியை வளர்த்த இளம்பெண், அது சாலையில் சுற்றித் திரிவதை பார்த்துள்ளார். உடனே நாய்க்குட்டியை தூக்குவது போல லாவகமாக தூக்கிச் சென்றுள்ளார். அப்போது அந்த சிங்கக்குட்டி அவரை தாக்காமல், குழந்தை போல வராமல் அடம்பிடித்துள்ளது.

இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவே அது வைரலாகியுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் ‘யாருமா நீ நாய்க்குட்டியை தூக்கி போற மாதிரி சிங்கக்குட்டி தூக்கிட்டு போற’ என்றும் தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் வரும் ‘சிங்கப்பெண்ணே... சிங்கப்பெண்ணே..’ இவருக்கு கரெக்ட்டாக இருக்கும் என குறும்பாக பதிவிட்டுள்ளனர்.

LIONESS, WOMAN, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்