இப்படியும் ஒரு கின்னஸ் சாதனையா??.. உலகையே திரும்பி பார்க்க வைத்த பெண்.. 106 நாட்கள் தொடர்ந்து செய்த 'அசாத்திய' விஷயம்
முகப்பு > செய்திகள் > உலகம்கல்வி, விளையாட்டு, கலை உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த விளங்கும் நபர்கள், அந்த துறைகளில் ஏதாவது வித்தியாசமாக ஒரு சாதனை படைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
உதாரணத்திற்கு நீச்சல் என்று எடுத்துக் கொண்டால், அதில் அசத்தும் ஒருவர், இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையை நீச்சலில் செய்ய வேண்டும் என முயற்சி மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 35 வயதான கேட் ஜைடன் என்ற பெண் ஒருவர், தற்போது படைத்துள்ள கின்னஸ் உலக சாதனை ஒன்று, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தடகள வீராங்கனை கேட் ஜைடன், கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல், தினமும் மராத்தான் ஓட தொடங்கி உள்ளார். அதன்படி, தினமும் சுமார் 42 கிலோமீட்டர் ஓடி தன்னுடைய மராத்தானை இவர் முடித்து வந்துள்ளார்.
அதன்படி, கடந்த டிசம்பர் 31 முதல், இந்தாண்டு ஏப்ரல் 15 வரை தினமும் 42 கிலோ மீட்டர் மராத்தான் என மொத்தம் 106 நாட்கள் ஓடி முடித்துள்ளார் கேட். அகதிகளுக்கான நிதி சேகரிப்பிற்காகவும், அது தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகவும் இந்த மராத்தான் ஓட்டத்தை கேட் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், 106 நாட்கள் மாரத்தான் மூலம், சுமார் 41 லட்ச ரூபாய் நிதியையும் அவர் சேகரித்துள்ளார். நிதிக்காக தொடங்கப்பட்ட மாரத்தான், மக்கள் மற்றும் ஊடங்கங்களில் அதிக கவனத்தை பெற, சாதனைக்காகவும் கேட் விண்ணப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 106 நாட்கள் தொடர் மராத்தான் என்பது கின்னஸ் சாதனையாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், அதே வேளையில், கேட் ஜைடனின் இந்த சாதனை ஓட்டத்திற்கு பின், கடுமையான துயரம் ஒன்றும் உள்ளது. அதாவது, தொடர்ந்து 46 நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல், கேட் மாரத்தான் ஓடி வந்த நிலையில், அதன் பின்னர் அவரது கால்கள் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனையை அவர் அணுகிய போது, அவரது முட்டியில் உள்ள எலும்பு பகுதியில் லேசான முறிவு ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இருந்த போதும், விழிப்புணர்வு மற்றும் நிதி சேகரிப்பிற்காக இந்த மாரத்தான் ஓட்டத்தை முறிந்த எலும்புகளுடனும் 106 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளார் கேட் ஜைடன். இப்படி ஒரு மகத்தான சாதனையை படைத்த கேட் ஜைடனை பொது மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மொத்தமா 42 அடிக்கு 'நகம்'.. "பின்னாடி இருக்குற உருக்கமான சபதம்.." கின்னஸ் சாதனை படைச்சும் கண் கலங்கும் பெண்
- "கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க.." கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகை & அமைச்சர் ரோஜா.. "இப்டி கூட சாதனை பண்ணலாமா??"
- "அம்மாடியோவ்.." கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம்.. "ஒரு மோதிரத்தில் இத்தன ஆயிரம் வைரமா??.." பிரமிப்பில் ஆழ்ந்த மக்கள்
- வாழ்க்கையில முக்கால்வாசி நாள் வானத்துலயே கழிச்சிருக்காங்க.. உலகின் வயதான விமான பணிப்பெண்.. கின்னஸ் நிர்வாகம் கொடுத்த அங்கீகாரம்..!
- 'Avengers' ஃபேனா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா??.. தியேட்டர்'ல படம் பார்த்தே கின்னஸ் ரெக்கார்ட்.. Counts கேட்டதுக்கே தல சுத்துது..
- 6000 கிமீ தூரம்.. 110 நாள் ரன்னிங்.. கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்.. யாருப்பா இந்த சுஃபியா கான்
- எப்படி 85 ஸ்பூனும் உடலோடு ஒட்டி இருக்கு? எந்த பசையும் இல்ல.. காந்த சக்தியும் இல்ல.. வியக்க வைக்கும் சாதனை மனிதன்
- VIDEO: ஒலிம்பிக்கில் அதிர்ச்சி சம்பவம்!.. சக போட்டியாளர்களுக்கு கிடைக்கவிடாமல்... தண்ணீர் பாட்டில்களை தட்டிவிட்ட மாரத்தான் வீரர்!.. வைரல் வீடியோ!
- அதிகரிக்கும் 'கொரோனா' பாதிப்பு... '103 வயசுல' என்னால முடிஞ்ச 'உதவி'... உலககத்தையே திரும்பி பார்க்க வைத்த 'அசத்தல்' தாத்தா!
- 'வீட்டுக்குள்ளேயே மாரத்தான் ஓட்டம்...' 'டைனிங்' ஹால்ல இருந்து 'பெட்' ரூமுக்கு ஓடினேன்...! எதுக்கு தெரியுமா? மொத்தம் 42 கிலோமீட்டர்...!