கல்யாணத்து அன்னைக்கி சந்திச்ச அவமானம்.. மறுநாளே வேலை'ய ராஜினாமா பண்ண மணப்பெண்.. "அப்படி என்னய்யா நடந்துச்சு??"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்றைய காலகட்டத்தில், திருமணம் என்றாலே ஒரு திருவிழா போல, அதனை மிகவும் விமரிசையாக தான் கொண்டாடி வருகிறார்கள்.

Advertising
>
Advertising

Also Read | "மொத்தமா ₹200 கோடிக்கும் மேல.." லாட்டரியில் இருந்த சின்ன 'ட்ரிக்'.. அத கரெக்ட்டா கண்டுபிடிச்சு பல தடவ பணம் ஜெயிச்ச வயதான தம்பதி..

பல நாட்களுக்கு முன்பே, திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கி, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் அழைத்து, ஜோராக கொண்டாடவும் முடிவு.செய்வார்கள்.

அது மட்டுமில்லாமல், உணவு, அலங்காரம், உடை என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள்.

இரண்டு பேர் இணைந்து, தங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் திருமணம் என்ற நிகழ்வை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத தருணமாக மாற்றவும் நினைப்பார்கள். அப்படி இருக்கையில், இளம்பெண் ஒருவர், தனது திருமணத்தில் நடந்த விரக்தி சம்பவம் ஒன்றின் காரணமாக எடுத்துள்ள முடிவு ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

சீனாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், இளம் பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் மணமக்களின் குடும்பத்தினர் அழைக்க முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில், தன்னுடன் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களை திருமணத்திற்கு அழைத்தால், மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்கள் என கருதிய இளம்பெண், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 70 சக ஊழியர்களையும் தனது திருமணத்திற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே அழைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 70 பேருக்கான உணவுகளையும் திருமண நாளில் அந்த பெண் தயார் செய்து வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், திருமண நாளன்று 70 ஊழியர்களும் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த மணப்பெண்ணுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. 70 பேரில் ஒரே ஒரு ஊழியர் தான் அந்த பெண்ணின் திருமணத்திற்கு வந்துள்ளார். இதனை அறிந்ததும் அதிக விரக்தி அடைந்த மணப்பெண், 70 பேருக்காக ஆறு டேபிளில் தயார் செய்து வைத்திருந்த உணவை வீணாக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்.

அவரது குடும்பத்தினர் முன்பு, இதன் காரணமாக அவமானத்தை சந்தித்த அந்த பெண், ஊழியர்கள் வராத காரணத்தினால், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இதனால், திருமணம் முடிந்த மறுநாளே, அந்த நிறுவனத்தில் இருந்து தனது வேலையை ராஜினாமா செய்யவும் புதுமண பெண் முடிவெடுத்துள்ளார். திருமணத்திற்கு உடன் பணியாற்றும் நபர்கள் யாரும் வரவில்லை என்பதால், வேலையை ராஜினாமா  செய்வதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அந்த பெண் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சக ஊழியர்கள் திருமணத்திற்கு வராத காரணத்தினால், வேலையை ராஜினாமா செய்த இளம்பெண் குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | பைக் ஏறியதும்.. Customer கிட்ட ஓட்டுநர் சொன்ன விஷயம்.. "ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இப்படி இருந்த மனுஷனா??.." மெர்சலான நெட்டிசன்கள்

JOBS, CHINA, WOMAN, RESIGNS, MARRIAGE, COLLEAGUES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்