ஆபரேஷன் முடிஞ்சதும் கெடச்ச கண் பார்வை.. "முதல் முறையா காதலன பாத்ததும்".. இளம்பெண் சொன்ன விஷயம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இளம்பெண் ஒருவருக்கு திடீரென கண் பார்வை பறிபோன நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் கவனிக்க வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி.. 10 மணிநேரம் நடந்த ஆபரேஷன்.. முதல்வரிடமிருந்து வந்த போன்காலால் நெகிழ்ந்துபோன தாய்..!

Sophia Corah என்ற பெண் ஒருவர், 18 வயதாக இருக்கும் போது, திடீரென அவரது கண் பார்வை மெல்ல மெல்ல பறிபோனதாக கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில், சோபியாவுக்கு கண் பார்வை குறைவாகிக் கொண்டே வந்த நிலையில், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது கண் பார்வையை முற்றிலுமாக அவர் இழந்து விட்டார்.

இதன் பின்னர், Keratoconus என்னும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக தான், அவரது முழு பார்வையும் பறிபோனது தெரிய வந்தது. ஆரம்பத்தில் இதனை அலர்ஜி என சோபியா கருதிய நிலையில், பின்னர் தான் சாதாரண விஷயம் இல்லை என்பதையும் உணர்ந்துள்ளார். எதிர்காலத்தில் தனது குழந்தைகள் உள்ளிட்ட எந்த நபர்களின் முகத்தையும் இனிமேல் பார்க்க முடியாது என கருதி ஆறு மாதம் தொடர்ந்து அழுது கொண்டே சோபியா இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து, மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வந்த சோபியா, தனக்கு பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். தொடர்ந்து, உளவியல் தொடர்பாக படிப்பதற்கும் Colrado பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிறிஸ்டியன் என்பவரின் அறிமுகம், சோபியாவுக்கு கிடைத்துள்ளது.

பார்வையை இழந்த சோபியாவுக்கு ஆதரவாக இருந்த கிறிஸ்டியன், அவரை சிறந்த முறையில் கவனித்தும் கொண்டார். அப்போது, சோபியாவுக்கு உருவாகி உள்ள Keratoconus பற்றி அறிந்து கொண்ட கிறிஸ்டியன், மீண்டும் கண் பார்வையை கிடைக்க வைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்பதையும் கண்டுபிடித்துள்ளார்.

இதற்கு சுமார் 16,000 பவுண்டுகள் வரை செலவாகும் என்பதால், அவ்வளவு பணத்தை சேகரிப்பது கடினம் என்றே சோபியா கருதி உள்ளார். ஆனால், கிறிஸ்டியன் களத்தில் இறங்கி நிதி திரட்டி, ஐந்தே வாரத்தில் அதற்கான பணத்தை ஏற்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு சோபியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முழு பார்வைத் திறனை மீண்டும் பெற்றார் சோபியா.

பார்வை இழந்த சமயத்தில், தனக்கு உறுதுணையாக இருந்து, பார்வையை மீண்டும் கிடைக்க உதவி செய்த கிறிஸ்டியனை பார்த்து தனது காதலை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சோபியா முடிவு செய்துள்ளார். இத்தனை நாட்கள், கிறிஸ்டியனின் முகத்தை சோபியா பார்த்ததே இல்லை என்ற நிலையில், முதல் முறையாக பார்த்த போது என்ன தோன்றியது என்பது பற்றியும் சோபியா சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

"நான் கற்பனை செய்து பார்த்ததை விட அவர் அழகாக இருந்தார். ஆனால், அவரது அழகான தோற்றம் என்பதை தாண்டி, அவர் காட்டிய அன்பு மற்றும் அக்கறையால், ஒரு சிறந்த நபராக தான் அவரை உணர்ந்து நான் காதலித்தேன். எனக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவரும் என் மீது காதல் கொண்டு தான் இருந்துள்ளார்" என சோபியா கூறி உள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட சோபியா - கிறிஸ்டியன் ஜோடி, சிறந்த திருமண வாழ்க்கையை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Also Read | முதல் முறையா Escalator ஏறிய பெண்கள்.. "எறங்குறப்போ அவங்க பண்ண விஷயம் தான் செம".. வைரல் வீடியோ!!

WOMAN, LOVER, WOMAN REGAINED HER VISION, BLIND WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்