"பல தடவ Resume அனுப்பியும் வேலை கிடைக்கல".. வித்தியாசமா யோசிச்ச பொண்ணு.. கேக் பார்சலை திறந்த நிறுவனத்திற்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக, கல்லூரி படிப்பை முடித்த பின்னர், அனைவரும் தங்களுக்கு பிடித்தமான வேலையை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

Advertising
>
Advertising

Also Read | "இந்தா நண்பா சாப்பிடு".. தாயாகவே மாறிய தோழன்.. வீடியோ'வ பாத்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் நெட்டிசன்கள்!!

இதற்காக, தங்கள் துறையை சேர்ந்த நிறுவனங்கள் பலவற்றிலும் தொடர்ந்து வேலைக்காக பலரும் விண்ணப்பித்து கொண்டே இருப்பார்கள்.

சில நேரம் ஒரு சில முயற்சிகளில், வேலை கிடைக்கலாம். மறுபக்கம், தொடர்ந்து ஏராளமான முயற்சிகள் செய்த போதிலும் வேலை வாய்ப்பு கிடைக்க காத்திருக்க தான் வேண்டி இருக்கும்.

அதே போல, ஒரு வேலைக்காக நாம் விண்ணப்பிக்கும் போது, நம்மை பற்றிய விவரங்கள் அடங்கிய Resume என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதில் நம்மை பற்றி இருக்கும் சுயவிவரங்கள் மற்றும் அதன் டிசைன்கள் நிறுவனங்களில் உள்ளவர்களை ஈர்க்கும் வகையில் இருந்தால், நிச்சயம் நமக்கான அழைப்பு வரும். அந்த அளவுக்கு Resume என்பது வேலைக்கான மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், பிரபல நிறுவனம் ஒன்றின் கவனத்தை ஈர்ப்பதற்காக இளம்பெண் ஒருவர் செய்த காரியம், தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசிக்கும் Karly Pavlinac Blackburn என்ற இளம் பெண் ஒருவர், நைக் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பலமுறை தனது சுய விவரங்கள் அடங்கிய ரெஸ்யூமை அனுப்பி உள்ளார். ஆனால், அங்கே வேலை எதுவும் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால், அவரது தோழி ஒரு ஆலோசனை கூற அதனை கையில் எடுத்துள்ளார் கார்லி. அதாவது, கேக் ஒன்றை வாங்கி அதில் தனது ரெஸ்யூமை எழுதி, அந்நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து அனுப்பி வைத்துள்ளார். மேலும், அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்த சமயத்தில், கார்லி அனுப்பிய கேக் சென்றடைந்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி பேசும் கார்லி, "இரண்டு வாரங்களுக்கு முன்பாக நைக் நிறுவனத்தில் என் சுயவிவர குறிப்புகளை அனுப்பினேன். ஆனால், அந்த நிறுவனம் தற்போது யாருக்கு வேலை வாய்ப்பு வழங்க தயாராக இல்லை என குறிப்பிட்டது. எனவே தான், கவனத்தை பெறுவதற்காக அங்கே நிகழ்ச்சி நடந்த போது, இப்படி கேக்கில் Resume அனுப்பி வைத்தேன். இதை விட சிறப்பான வழி எனக்கு தோன்றவில்லை" என கூறி உள்ளார்.

இப்படி வித்தியாசமாக முயற்சி செய்தும் வேலைக்கான நேர்காணல் அழைப்பு அந்த பெண்ணுக்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. இருந்த போதும், வித்தியாசமாக இளம் பெண் அனுப்பிய Resume தொடர்பான விஷயம் குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "ஒரு காலத்துல ட்யூஷன் டீச்சரா இருந்தவங்க".. ஒரே நாளில் 14 லட்சம் சம்பாத்தியம்.. வாழ்க்கையே திருப்பி போட்ட அந்த ஒரு நாள்!!

RESUME, CAKE, COMPANY, WOMAN PRINTS RESUME ON CAKE, JOB SEEKER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்