Online ஆர்டர் அட்ராசிட்டி.. ஹாயா உக்கார 'சேர்' ஆர்டர் செய்த 'பெண்'.. "வந்தது என்னமோ சேர் தான்.. ஆனா, அதுல தான் ஒரு பெரிய ட்விஸ்ட்டே"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆன்லைன் மூலம் நாற்காலி ஒன்றை ஆர்டர் செய்த பெண்ணிற்கு, வீடு தேடி வந்த பார்சல், அதிர்ச்சியை அளித்துள்ளது.

Advertising
>
Advertising

திடீரென தீ பிடித்து எரிந்த லாரி.. பயத்தில் குதித்த டிரைவர்.. மறுநொடியே வந்த நபர் சூப்பர் ஹீரோவாக மாறி சாகசம்

இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் வழக்கம், மக்களிடையே அதிகரித்து வருகிறது.

அப்படி நாம் ஆர்டர் செய்யும் போது, சில நேரம் நாம் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக, வேறு பொருளும் வரும். அப்படி பலருக்கு நடக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகளை நாம் நிறைய படித்திருக்கிறோம்.

ஆன்லைன் ஆர்டர்

அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது நிகழ்ந்துள்ளது. சம்மந்தப்பட்ட நபர் ஆர்டர் செய்த பொருள் போல ஒன்று வந்தது என்றாலும், அதில் இருக்கும் மாற்றம் தான் வேடிக்கையாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைன் மூலம் ஆடம்பர வெல்வெட் நாற்காலி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதற்கு இலவச ஷிப்பிங் உள்ளது என்பதால், மிகவும் மகிழ்ச்சியாக அந்த பெண்ணும் ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.

பார்சலுக்குள் காத்திருந்த அதிர்ச்சி

அது மட்டுமில்லாமல், தள்ளுபடி விலையில் அந்த நாற்காலி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், அந்த பெண் ஆர்டர் செய்த நாற்காலி, பார்சலாக வீடு தேடி வந்துள்ளது. மிகப் பெரிய நாற்காலி சிறிய பார்சலில் வந்ததால் அந்த பெண் ஒரு நிமிடம் திகைத்து போனார். தொடர்ந்து, பார்சலை திறந்து பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி தான் காத்திருந்தது. ஆன்லைனில் மிகவும் பெரிதாக ஒருவர் உட்காரும் அளவிற்கு அந்த நாற்காலி ஆடம்பரமாக இருந்துள்ளது. ஆனால், வீட்டிற்கு வந்த நாற்காலியோ, ஒரு சிறு பொம்மை (Miniature) போன்ற வடிவில், கைக்குள் அடங்கும் வகையில் இருந்துள்ளது.

வைரல் வீடியோ

இது தொடர்பாக, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அந்த பெண், 'இதனால் தான் இப்படிப்பட்ட பொருட்களை நான் ஆர்டர் செய்வதில்லை. இதன் மூலம் நான் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், ஆன்லைனில் பொருள் ஒன்றினை ஆர்டர் செய்யும் போது, ரிட்டர்ன் செய்யப்படுமா என்பதை பார்த்து ஆர்டர் செய்ய வேண்டும் என்பது தான்' என குறிப்பிட்டுள்ளார்.

சிரிப்பும், சோகமும்

மேலும், அந்த வீடியோவில், ஏன் ஃப்ரீ ஷிப்பிங் என்பது, இப்போது தான் புரிகிறது என குட்டி நாற்காலியை கையில் வைத்துக் கொண்டு குறிப்பிட்டுள்ளார். அதே போல, தான் ஆர்டர் செய்த நாற்காலிக்கான விலை குறைவானது இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் சிரிப்பும், மறுபக்கம் சோகமும் கூடிய அந்த பெண்ணின் வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோவிற்கு, பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை என்றும், மிகவும் சோகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆர்டர் செய்யும் போது, அந்த பெண் கமெண்ட்டுகளை பார்க்காமல் வாங்கி விட்டார் போல என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

ஜாலியாக உட்கார வேண்டி, நாற்காலி ஒன்றை ஆர்டர் செய்த பெண்ணிற்கு, அதற்கு பதிலாக Miniature நாற்காலி வந்து சேர்ந்த விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

"நொந்து நூடுல்ஸா நின்னுட்டு இருந்தேன்.." பக்கத்துல வந்த 'தோனி', கூலா ஒன்னு சொன்னாரு பாருங்க.. சாஹல் சொன்ன ரகசியம்

WOMAN ORDERS EXPENSIVE CHAIR, ONLINE, RECEIVES MINIATURE, ஆன்லைன், நாற்காலி, ஆன்லைன் ஆர்டர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்