நீங்க 'ஆர்டர்' பண்ண 'சாப்பாடு' வந்துருச்சு... சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்த 'மெசேஜ்'... "என்னங்க சொல்றீங்க??..." ஷாக்கான 'இளம்பெண்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஹோட்டலுக்கு சென்று உணவருந்துவதை விட, ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அப்படி இளம்பெண் ஒருவர் செய்த ஆன்லைன் மூலம் செய்த ஆர்டரின் முடிவு எப்படி இருந்தது என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

நீங்க 'ஆர்டர்' பண்ண 'சாப்பாடு' வந்துருச்சு... சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்த 'மெசேஜ்'... "என்னங்க சொல்றீங்க??..." ஷாக்கான 'இளம்பெண்'!!!

லண்டன் பகுதியை சேர்ந்த இல்யாஸ் என்ற பெண் ஒருவர், பர்கர் உள்ளிட்ட உணவு பொருட்கள் சிலவற்றை உபர் ஈட்ஸ் (Uber Eats) மூலம் ஆர்டர் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணிற்கு நீங்கள் ஆர்டர் செய்த பொருள் வந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் வந்துள்ளது. அதன் பிறகு, உபர் டிரைவர் உங்கள் வீட்டிற்கு அருகே வந்து விட்டார் என்ற மெசேஜ் ஒன்றும் உள்ளது.
woman order on uber eats receive confession from delivery boy

இதனால், தனது உணவுப் பொருளை வாங்க இல்யாஸ் தயாரான நிலையில், அடுத்து அவர் சற்றும் எதிர்பாராத மெசேஜ் ஒன்று, உபர் ஓட்டுனரிடம் இருந்து வந்துள்ளது. 'என்னை மன்னித்து  விடுங்கள். நான் அந்த உணவை உண்டு விட்டேன்' ('Sorry Love, Ate Your Food') என்பது தான் அந்த குறுஞ்செயற்தி.


இதனைக் கண்ட இல்யாஸ், ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனடியாக, இல்யாஸ் உபர் உணவு செயலிக்குள் சென்ற நிலையில், அதில், 'உங்களது உணவு டெலிவரி செயப்பட்டது' என குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உபர் ஊழியரை குறை கூறாமல் புதிய ஆர்டரை அந்த இளம்பெண் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து இல்யாஸ் கூறுகையில், 'வழக்கமாக நான் உபர் ஈட்ஸ் மூலம் ஆர்டர் செய்வதை போன்று இல்லாமல், சற்று காமெடியாக இந்த ஆர்டரை அமைய வைத்ததால் நான் அந்த ஊழியரை மன்னித்து விடுகிறேன். ஒருவேளை அந்த ஊழியர் அதிக பசியுடன் இருந்திருக்கலாம். என்னால் ஒருவர் இந்த காலகட்டத்தில் வேலையிழக்க வேண்டும் என நான் விரும்பவில்லை. ஆரம்பத்தில் சற்று அதிர்ந்து போன நான், அதன்பிறகு நடந்த விஷயத்தை எல்லாம் நான் வேடிக்கையாகவே பார்க்கிறேன். இதற்கு முன்பு, எனக்கு இப்படி நடந்ததில்லை' என இல்லிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் ஆர்டர் செய்த உணவை ஒருவர் அருந்தினார் என்பது எனக்கு தெரிய வந்ததும், அதனை மறைக்காமல், நேர்மையாக என்னிடம் அந்த ஊழியர் தெரிவித்ததையும் சிறந்த விஷயமாக நான் பார்க்கிறேன் என்றும் இல்யாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்