"அவ காணாம போய் 47 வருஷம் ஆயிடுச்சு".. இத்தன நாள் கழிச்சு விலகிய 'மர்மம்'.. "ஆனாலும் அதுல ஒரு பிரச்சனை இருக்கு"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் காணாமல் போன நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து தெரிய வந்துள்ள விவரம் கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வெளியான ராணி எலிசபெத் இறப்பு சான்றிதழ்.. "மரண நேரத்துல நடந்த நெறய ரகசியம் இப்ப உடைஞ்சு இருக்கு"

வர்ஜீனியாவை அடுத்த Fairfax என்னும் நகரத்தை சேர்ந்தவர் Patricia Agnes. இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் அவருக்கு 18 வயதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பல இடங்களில் பட்ரீசியாவைத் தேடியும் அவர் கிடைக்காமல் போனதால், அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிகம் மனம் உடைந்து போயுள்ளனர்.

இதனிடையே, கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், McLean பகுதியில் உள்ள அடுக்குமாடி வளாகம் ஒன்றில், மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, இதன் ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொண்டதில், 20 வயது மதிக்கத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்க பெண் ஒருவரின் உடல் என்றும் தலையில் துப்பாக்கி குண்டு பட்டு அந்த பெண் உயிரிழந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, இது யார் என்பதை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, துப்பறியும் அதிகாரிகள், பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்கை தீர்க்க உதவும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்படி 21 ஆண்டுகள் கழித்து அந்த பெண்ணின் உறவினர்கள் குறித்த விவரம் கிடைத்துள்ளது.

அப்படி மேம்படுத்தப்பட்ட DNA பரிசோதனை மூலம் இறந்து போன பட்ரீசியாவின் சகோதரியான வெரோனிகா பற்றி முதலில் கண்டுபிடித்துள்ளனர். முன்னதாக, 47 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட சற்று அதிக வயது மூத்த நபர் ஒருவரை பட்ரீசியா டேட்டிங் செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் தான் அவர் காணாமலும் போயுள்ளார். பட்ரீசியா மரணம் குறித்து அந்த நபரிடம் விசாரிக்க போலீசார் முயற்சி மேற்கொண்ட போதிலும் அவரை அடையாளம் காண முடியவில்லை என கூறப்படுகிறது.

கடைசியாக தனது சகோதரி பட்ரீசியாவை பார்த்த போது கார் ஒன்றில் அவர் சென்றதாகவும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் சகோதரி வெரோனிகா குறிப்பிட்டுள்ளார். இத்தனை ஆண்டுகள் கழித்து மாயமான பெண் பற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், விரைவில் இதற்கு காரணமான நபரை அறியவும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "வெள்ளிக்கிழமை மங்களம் பொங்க".. தமிழ் வசனத்துக்கு Lip Sync செஞ்ச ஷிகர் தவான்.. வைரல் வீடியோ!!

WOMAN, MISSED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்