பூனையெல்லாம் வளக்க கூடாது.. ஹவுஸ் ஓனர் போட்ட கண்டிஷன்.. அதுக்காக இப்படி ஒரு முடிவா? திகைக்க வைத்த பெண்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வீட்டில் பூனைகளை வளர்க்கக் கூடாது என ஹவுஸ் ஓனர் கூறியதால் வித்தியாசமான முடிவை எடுத்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | ஈ தொல்லைக்காக ஊரையே காலிசெய்யும் கிராம மக்கள்.. கோவை அருகே சோகம். !

இங்கிலாந்தின் தென் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் டெபோரா ஹாட்ஜ். இவருக்கு 49 வயதாகிறது. இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னால் தென் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்து உள்ளார். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் பல கண்டிஷன்கள் விதித்திருக்கிறார். அவற்றுள் முக்கியமானது வீட்டில் பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்க்க கூடாது என்பதுதான். ஆனால் டெபோராவிடம் இந்தியா எனும் பெயர் சூட்டப்பட்ட பூனை ஒன்று இருந்திருக்கிறது.

கவலை

மிகுந்த சிரமப்பட்டு வீட்டின் உரிமையாளரை சமாதானப்படுத்தி இந்தியாவை வளர்த்து வந்திருக்கிறார் டெபோரா. ஆனால் இந்தியாவால் இது டெபோராவிற்கும் வீட்டின் உரிமையாளருக்கும் அப்போது தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் கவலை அடைந்த டெபோரா தனது செல்ல பூனையான இந்தியாவையே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் விளையாட்டுக்கு சொல்வதாக இந்த டெபோராவின் நண்பர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் சொன்னபடியே கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி இந்தியாவை கரம் பிடித்து இருக்கிறார் இங்கிலாந்து பெண்மணியான டெபோரா. இதுகுறித்து அவர் பேசுகையில் "இனி என்னையும் இந்தியாவையும் யாராலும் பிரிக்க முடியாது. எதிர்காலத்தில் வேறு வீட்டிற்கு மாறினாலும் அந்த வீட்டின் உரிமையாளர்கள் இதுகுறித்து கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் இந்தியா தற்போது எனது வாழ்க்கை துணையாக மாறியிருக்கிறது" என்கிறார் பெருமையாக.

இந்தியா

ஏற்கனவே ஒரு வீட்டில் வசித்து வந்த டெபோரா அந்த வீட்டின் உரிமையாளர் சண்டை போட்டதை அடுத்து தனது மூன்று செல்ல நாய்களை பாதுகாப்பு இல்லத்தில் விட்டிருக்கிறார். ஆனால் இந்த முறையும் தன்னால் தனது செல்லப் பூனையை விட்டு இருக்க முடியாது எனக் கருதி 5 வயதான இந்தியாவை திருமணம் செய்திருக்கிறார் டெபோரா. அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் இந்தியா தனது ஒரு  காலை இழந்திருக்கிறது. அதனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வரும் டெபோரா "இந்தியா இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது" என்கிறார்.

திருமணமாகி இரண்டு குழந்தைகளைக் கொண்ட டெபோரா தற்போது தனது வாடகை வீட்டில் இந்தியாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் பூனைகளை வளர்க்க கூடாது என கூறியதையடுத்து பூனையையே திருமணம் செய்துகொண்ட பெண்ணின் செயல் இங்கிலாந்து மட்டுமல்லாது உலகம் முழுவதும் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

WOMAN, PET CAT, LANDLORD, இங்கிலாந்து, ஹவுஸ் ஓனர், பூனை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்