ஃபுட் & மளிகை டெலிவரி பண்ணியே வாரத்துக்கு ரூ.90 ஆயிரம் வரை சம்பாத்யம்... உலகளவில் வைரலாகும் ஸ்மார்ட் பெண்.!!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்து உண்ணும் பழக்கம் என்பது மக்கள் பலரது மத்தியில் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
நேராக உணவகம் சென்று உணவருந்தி வருவதை விட, வீட்டில் அல்லது அலுவலத்தில் இருந்தபடியே நகர பகுதிகளில் உணவினை பெரும்பாலானோர் ஆர்டர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இளம் பெண் ஒருவர் உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை டெலிவரி செய்து வாரத்திற்கு சுமார் 90,000 ரூபாய் வரை சம்பாதித்து வரும் விஷயம், பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது. கடின உழைப்பையும், ஸ்மார்ட் வொர்க்கையும் சரியாக கையாண்டால் மிகவும் பெரிய இடத்திற்கு வரலாம் என பலரும் கூறுவார்கள். அதனை தான் இந்த இளம்பெண் செய்து வருகிறார்.
லண்டனை சேர்ந்தவர் அட்லாண்டா மார்ட்டின் (Atlanta Martin). விமான நிர்வாகத்தின் முழு நேர பணியிலிருந்து விலகி விட்டு தற்போது டெலிவரி ஊழியராக தனது காதலருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். பொதுவாக உணவினை நாம் டெலிவரி செய்யும் வேலை பார்க்கும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை நம்மால் சம்பாதிக்க முடியும்.
ஆனால் அட்லாண்டா மார்ட்டின் மற்றும் அவரது காதலர் பெஞ்சமின் இணைந்து ஒரு வாரத்திற்கு சுமார் 1000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 90 ஆயிரம் ரூபாய்) வரை சம்பாதித்து வருகின்றனர்.
Just Eat, Uber Eats உள்ளிட்ட பல டெலிவரி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் அட்லாண்டா, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களை விடவும் அதிகம் சம்பாதித்து வருகிறார். அது மட்டுமில்லாமல், அட்லாண்டாவும் அவரது காதலரும் சேர்ந்து எத்தனை ஆர்டர்கள் டெலிவரி செய்கிறார்கள் என போட்டி போட்டு வேலை பார்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு முறை 24 மணி நேரமும் தொடர்ந்து இவர்கள் டெலிவரி செய்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது பற்றி பேசும் அட்லாண்டா, "முதலில் இந்த வேலை ஆரம்பிக்கும் போது 24 மணி நேரமும் டெலிவரி இயங்கக்கூடிய இடமாக லண்டன் மட்டும் தான் இருந்தது. ஆனால் டெலிவரி வேலைக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து பிரைட்டன் பகுதியிலும் 24 மணி நேர சேவை தற்போது இயங்கி வருகிறது. என்னுடன் எனது காதலன் பெஞ்சமினும் இருப்பதால், ஒருவரை ஒருவர் நாங்கள் ஊக்கப்படுத்தி மாறி மாறி வாகனம் ஓட்டி வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
காதலனுடன் இணைந்து இப்படி மணிக்கணக்கில் டெலிவரி செய்து பல ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வரும் இளம் பெண்ணை நெட்டிசன்கள் பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
"இனிமே மன்கட் இல்ல, அதுக்கு பதிலா".. ICC கொண்டு வந்த புதிய ரூல்ஸ்.. "ஒவ்வொண்ணும் Gun மாதிரி இருக்கே"
தொடர்புடைய செய்திகள்
- "கல்யாணம் ஆகி 8 வருசம் கழிச்சு".. கணவர் பத்தி மனைவிக்கு தெரிஞ்ச 'உண்மை'.. "இத கண்டுபிடிக்கவே எனக்கு இத்தனை நாள் ஆயிடுச்சு"
- சொந்த பணத்தை கொள்ளையடிக்க.. துப்பாக்கியுடன் Bank'ல என்ட்ரி கொடுத்த பெண்.. "காரணம் தெரிஞ்சா மிரண்டு போவீங்க"
- டீ விற்கும் வாலிபரை கரம்பிடித்த மருத்துவர்.. "அவரு மேல் Love வந்த காரணம் தான் அல்டிமேட்!!"..
- ஆக்ஸ்போர்டு University'ல் பட்டம் பெற்ற இந்திய பெண்.. தாத்தா பட்ட கஷ்டம் பத்தி போட்ட பதிவு.. "படிச்சவங்க எல்லாரும் கலங்கி போய்ட்டாங்க"
- கணவருக்கு இருந்த நோய்.. எந்த Test'ம் பண்ணாம கண்டுபிடித்த மனைவி.. "எப்படின்னு தெரிஞ்சு ஒட்டுமொத்த மருத்துவர்களும் திகைச்சு போய்ட்டாங்க"
- பசியில் உணவு ஆர்டர் செய்த வாலிபர்.. பார்சல திறந்து பாத்ததும் உள்ள இருந்த 'கடிதம்'.. "ஒரு நிமிஷம் அப்படியே தூக்கி வாரி போட்டுருச்சு"
- அம்மாக்கு அனுப்புறதுக்கு பதிலா.. முதல் மாச சம்பளத்த வேற நபருக்கு அனுப்பிய பெண்.. "கடைசி'ல அந்த நபர் சொன்னத கேட்டு கண்ணீரே வந்துடுச்சு"
- "33 வயசுல பாட்டியா??".. சொந்தமா குழந்தை பெத்துக்குறதுக்கு முன்னாடி பெண்ணுக்கு வந்த நிலை.. சுவாரஸ்ய பின்னணி!!
- "ஆறு வருசமா love பண்ணி, ஒண்ணா ஊர் சுத்துனோம், ஆனா".. காதலன் யாருன்னு தெரிஞ்ச உண்மை.. உடைந்து போன இளம்பெண்!!
- "தரையில என் கால் பட்டாலே மயக்கம் வந்துடும்".. 23 மணி நேரம் படுக்கையில் கழிக்கும் பெண்.. வினோத காரணம்!!