விமான கழிவறையில் 5 மணி நேரம் அவதிப்பட்ட பெண்.. நடுவானில் நடந்தது என்ன..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது நடுவானில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு விமானம் ஒன்று சேர்ந்துள்ளது. அதில் மரிசா ஃபோட்டியோ என்ற பெண் குடும்பத்துடன் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் மரிசாவிற்கு தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தான் வைத்திருந்த ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்துள்ளார்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து உடனடியாக விமானப் பணிப்பெண்ணிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு தனி இருக்கை கேட்டுள்ளார். ஆனால் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருந்ததால், அவருக்கு தனி இருக்கை கொடுக்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து பயணிகள் நலன் கருதி அவர் கழிவறையில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டார். சுமார் 5 மணிநேரம் அவர் கழிவறையில் அமர்ந்தே பயணம் செய்தார். பயணம் மேற்கொள்ளும் முன் 2 பிசிஆர் பரிசோதனையும், 5 பரிசோதனையும் மேற்கொண்டுள்ளார். அதில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CORONAVIRUS, FLIGHT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்