செல்லப் பிராணியின் பிறந்தநாளுக்கு 11 லட்சம் ரூபாய்... ட்ரோன் வானவேடிக்கை நடத்தி சிக்கலில் மாட்டிக்கொண்ட பெண்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது செல்லப்பிராணியிந் பிறந்தநாளைக் கொண்ட பெண் ஒருவர் சுமார் 11 லட்சம் ரூபாயை செலவழித்துள்ளார். இத்தனை லட்சங்கள் செலவு செய்ததற்கு தற்போது ஒரு சிக்கலிலும் மாட்டிக் கொண்டுள்ளார் அந்தப் பெண்.

Advertising
>
Advertising

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்லப் பிராணியான நாய்க்குட்டியின் 10-வது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடி உள்ளார். மேலும், நாயின் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட ட்ரோன்கள் கொண்ட வானத்தில் ஒளி வேடிக்கையும் நடத்தி உள்ளார்.

ட்ரோன்களின் வான வேடிக்கைக்காக சுமார் 520 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்கள் அனைத்தும் இணைந்து வானத்தில் “டூடூவுக்கு 10-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என சீன மொழியில் வானத்தில் வாழ்த்துத் தெரிவிக்கும்படி இருந்தன. இந்த ட்ரோன்கள் வான வேடிக்கை சீனாவில் உள்ள சியாங்க்ஜியாங் ஆற்றங்கரையின் மேல் நடத்தப்பட்டது.

முதலில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த ட்ரோன்கள் பின்னர் ஒரு பரிசு திறக்கப்படுவதைப் போலவும் அதிலிருந்து கேக் ஒன்று வருவதைப் போலவும் ஒளி வெள்ளத்தில் மிளிர்ந்தன. இந்த ட்ரோன்கள் வானவேடிக்கைக்கு 520 ட்ரோன்கள் பயன்படுத்தியதற்கான காரணத்தையும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

காரணம், சீன மொழியில் 520 எண்ணைக் குறிப்பிடும்போது அது ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை பிரதிபலிப்பது போல் இருக்குமாம். இந்த அனைத்துக் கொண்டாட்டங்களும் சிறப்பாக அமைந்திருந்தாலும் இது சட்டத்துக்கு புறம்பான செயல் ஆகியுள்ளது.

ட்ரோன்கள் வான வேடிக்கைக்கு அனுமதி வாங்காமல் நடத்தியது, ட்ரோன்கள் தடை செய்யப்பட்ட எல்லையில் அதை பறக்கவிட்டது, உயர்ந்த கட்டடங்களுக்கு நடுவில் ட்ரோன்கள் சாகசம் நடத்தியது எனப் பல குற்றச்சாட்டுகளுக்கு அந்தப் பெண் ஆளாகி உள்ளார். சில ட்ரோன்களை போலீஸார் சுட்டு வீழ்த்தக் கூட முயற்சி செய்தததாகக் கூறப்படுகிறது.

CELEBRATION, செல்லப்பிராணி, நாய் பிறந்தநாள், ட்ரோன் வானவேடிக்கை, DOG BIRTHDAY, DRONE LIGHT SHOW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்