"30 வருசமா இத யாரும் கவனிக்கலயா?".. பாட்டியின் கல்லறையில் இருந்த வார்த்தை.. முதல் தடவ பாத்ததும் தலை சுற்றி போன 'பேத்தி'
முகப்பு > செய்திகள் > உலகம்தனது பாட்டியின் கல்லறையை முதல் முதலாக பார்த்த பெண் ஒருவர், அதில் இருந்த வாசகம் ஒன்றை கண்டு திகைத்து போன சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | "ஆத்தாடி, இந்த ராக்கி கயிறு விலை என்ன இவ்ளோ இருக்கு?!.." கேட்டதும் மிரண்டு போகும் சகோதரிகள்..
இறந்த ஒருவரின் கல்லறை மீது எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் என்பது, அந்த நபரின் முக்கியத்துவம் தொடர்பாக இடம்பெற்றிருக்கும். அப்படி ஒரு மூதாட்டியின் கல்லறையில் இருந்த பிழை தான், பேத்தியின் கவனத்தில் வந்தது மட்டுமில்லாமல், அவரை தலை சுற்றவும் வைத்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த அந்த பெண் பேசுகையில், "எனது பாட்டி தன்னுடைய 40 வயதில் உயிரிழந்தார். அப்பொழுது எனது தாய்க்கு சுமார் 20 வயது இருந்தது. எனது பாட்டி இறந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நான் பிறந்தேன். தன்னுடைய தாயின் இழப்பு தன்னை மிகவும் பாதித்திருந்ததால், அவரின் கல்லறைக்கு எனது தாய் ஒரு முறை கூட சென்றதில்லை. தாய் செல்லாததன் காரணமாக என்னுடைய பாட்டியின் கல்லறை எங்கு இருப்பது என்பது கூட எனக்கு தெரியாமல் இருந்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில், என்னுடைய பாட்டி இறந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு, விடுமுறைக்கு வேல்ஸ் பகுதிக்கு வந்திருந்த நான், பாட்டியின் கல்லறைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன். அப்படி நான் அங்கே சென்று எனது பாட்டியின் கல்லறையை போய் பார்த்த போது தான், கல்லறை வாசகம் பொறிக்கப்பட்டு வைத்திருந்த கல்லில் ஒரு தவறு இருப்பதைக் கண்டு ஒரு நிமிடம் நான் அதிர்ந்து போனேன். இதற்கு காரணம், அவர் 'அதிகம் அன்புள்ள பாட்டி' (a dotting grandmother) என்று இருப்பதற்கு பதிலாக, அதில் அவர் ஒரு 'தத்தெடுக்கப்பட்ட பாட்டி' (adopting grandmother) என்ற எழுத்து பிழை இருந்தது. கடந்த 30 வருடமாக, ஒருவர் கூட இதனை கவனிக்கவில்லை என்பதை நினைத்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன்" என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
பாட்டியின் கல்லறையில் இருந்தது தொடர்பாக, தன்னுடைய தாயிடமும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை சரி செய்யலாமா அல்லது அப்படியே விட்டு விடலாமா என்றும் தன்னுடைய சமூக வலைதளத்தில் அந்த பெண் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
30 வருடமாக மூதாட்டியின் கல்லறையில் இருந்த தவறை அவரது உறவினர்கள் யாரும் கவனிக்காமல் இருந்து வந்த நிலையில், அவரது பேத்தி முதல் முறையாக அங்கே வந்த போது கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | "கோவில்'ல திருடிட்டு போறதுக்கு முன்னாடி.." திருடன் செஞ்ச ஒரே ஒரு சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ராத்திரில சூட்கேசுடன் நின்ன இளம்பெண்".. கரெக்ட்டா வந்த போலீஸ்.. கணவனை பிரிந்து காதலருடன் லிவிங் டுகெதரில் இருந்த பெண் செஞ்ச பயங்கரம்..!
- விட்டு விட்டு எரியும் லைட்.. தோன்றி மறையும் உருவம்.. பீதியை கிளப்பும் இளம்பெண் 'வீடு'!!.. "உள்ள போகவே கால் நடுங்குமாம்"..
- "ஆண் பிள்ளை தான் வேணும்னு.. 8 வருஷமா இப்படி பண்றாங்க.. என்னால தாங்க முடியல".. அமெரிக்காவில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு.!
- பானிபூரி கடை நடத்தும் 'இளம்பெண்'.. "பக்கத்துல போய் காரணத்த கேட்டதும்.." ஒட்டுமொத்த நெட்டிசன்களும் ஒடஞ்சு போய்ட்டாங்க..
- "10 நிமிஷம் பொறுத்துக்கோ".. பிரசவ வலியால் துடித்த மனைவி.. உயிரை கையில பிடிச்சுக்கிட்டு காரோட்டிய கணவன்.. கடைசில பெண் எடுத்த துணிச்சலான முடிவு.!
- சகோதரி கனவுல வந்த 5 எண்கள்.. அடுத்த கொஞ்ச நாளுல.. "அவங்க வாழ்க்கையே மாறிடுச்சு".. கூரை மேல் கொட்டிய அதிர்ஷ்டம்
- மொத்தமா 42 அடிக்கு 'நகம்'.. "பின்னாடி இருக்குற உருக்கமான சபதம்.." கின்னஸ் சாதனை படைச்சும் கண் கலங்கும் பெண்
- "ஹலோ சார், இந்த தெரு பக்கத்துல.." போலீஸுக்கு வந்த போன் கால்.. "ஸ்பாட்'ல போய் பாத்ததும்".. அதிர்ந்த போலீஸ்.. சோதனை பண்ணதுல கெடச்ச ஒரு 'ரசீது'
- வெள்ளத்தில் சிக்கிய காருக்குள்ள இருந்து கேட்ட குரல்.. துணிஞ்சு களத்துல இறங்கிய அதிகாரிகள்.. உலக அளவில் பரபரப்பை கிளப்பிய வீடியோ.!
- வீட்டு பணியாளருடன் காதல்.. தனியாக இருந்த கோடீஸ்வர பெண் எடுத்த முடிவு.. "இது தான் அவரு மேல எனக்கு 'Love' வர காரணம்.."