சோதனையின்போது ‘பெண்ணின் ஹேண்ட் பேக்கில் இருந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற விமான நிலைய அதிகாரிகள்’..
முகப்பு > செய்திகள் > உலகம்விமான நிலையத்தில் கைப்பையில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
ஃபிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலா விமான நிலையத்தில் அதிகாரிகள் பெண் பயணி ஒருவரின் கைப்பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தப் பையில் பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை ஒன்று இருப்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ந்துபோய் நின்றுள்ளனர். அந்தப் பெண் தன் தோளில் மாட்டியிருந்த சற்றே பெரிதான கைப்பையில் வைத்து பச்சிளம் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து குழந்தையை மீட்ட அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்தப் பெண் குழந்தைக்கு தான் உறவினர் எனவும், ஆனால் அதை நிரூபிக்க தன்னிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார். ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த குழந்தைகள் பெற்றோர் அல்லாதவர்களுடன் வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டுமானால் பெற்றோர் கைப்பட எழுதிய ஒப்புதல் கடிதம் அல்லது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
இதன் காரணமாக எந்தவித ஆவணங்களும் இல்லாத அந்தக் குழந்தையை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ள விமான நிலைய அதிகாரிகள், அந்தப் பெண்ணை தேசிய புலனாய்வு முகமைக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கைப்பையில் வைத்து எடுத்து செல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அடுத்த பாஜக தலைவர் ரஜினியா?’... ‘நண்பர் திருநாவுக்கரசர் பேட்டி’!
- ‘மூளைச்சாவு அடைந்த தாய்’.. ‘117 நாட்களுக்குபின் பிறந்த குழந்தை’.. சாதித்துக்காட்டிய மருத்துவர்கள்..!
- ‘குடும்பமே இறந்து கிடந்த பயங்கரம்’.. ‘14 வயது சிறுவன்’ அளித்த ‘உறைய வைக்கும் வாக்குமூலம்’..
- ‘ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய பெண்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!
- ‘பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்’.. ‘தனியார் மருத்துவமனையில்’ நடந்த அதிரவைக்கும் சம்பவம்..
- ‘6 மணி நேரமாக வலியில் துடித்தும்’.. ‘உதவாமல் வேடிக்கை பார்த்த கொடூரம்’.. ‘கர்ப்பிணிக்கு நடந்த பரிதாபம்’..
- சுங்கச் சாவடியில் ‘பெண் ஊழியரிடம்’.. ‘இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. வைரலாகும் வீடியோ..
- ‘டாக்டர்கள் அளித்த தவறான தகவலால்’.. ‘புதிதாக திருமணமான இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’..
- ‘பச்சிளம் குழந்தையின் வயிற்றில் இருந்ததைப் பார்த்து..’ உறைந்து நின்ற டாக்டர்கள்.. ‘குடும்பத்தினர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘த்ரில்லுக்காக’ தொழிலதிபர் செய்த அதிர்ச்சிக் காரியம்.. ‘கையும்களவுமாக’ மடக்கிப் பிடித்த போலீஸ்..