Partner பத்தி ஒரு Pageக்கு பெண் கொடுத்த விளம்பரம்.. "ஊரே இப்போ அந்த பொண்ண தான் தேடிக்கிட்டு இருக்கு".. இதுதான் காரணம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் உள்ள செய்தித் தாள் ஒன்றில், ஒரு முழு பக்க விளம்பரம் தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read | லேட்டா வந்த Delivery ஊழியர்.. கடுப்புடன் கதவைத் திறந்ததும் கலங்கிப் போன கஸ்டமர்... அடுத்தடுத்து 'ட்விஸ்ட்'!!
ஆஸ்திரேலியாவில் உள்ள Mackay and Whitsunday Life என்ற நாளிதழில், சமீபத்தில் ஒரு விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதுவும் ஒரு முழு பக்கத்தில் இந்த செய்தி அச்சிடப்பட்டுள்ளது.
இந்த பிரபல நாளிதழில் அடிக்கடி செய்தி படிப்பவர்கள், நிச்சயம் அதன் நான்காவது பக்கத்தை பார்த்த போது ஒரு நிமிடம் அதிர்ந்து போயிருப்பார்கள்.
இதற்கு காரணம், அந்த பக்கத்தில் இருந்த ஒரு செய்தி தான். அதில், மிகப் பெரிய எழுத்துக்களில் ஜென்னி என்ற பெண் ஒருவர், ஸ்டீவ் என்ற நபருக்கு கொடுக்கும் மெசேஜ் போல இருந்தது. அதில் இருந்த வாக்கியத்தில், "டியர் ஸ்டீவ், நீ அவளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என நான் நம்புகிறேன். நீ எவ்வளவு பெரிய கேவலமான ஏமாற்றுக்காரன் என்பது தற்போது நகரம் முழுவதும் தெரிந்து விடும். ஜென்னியிடம் இருந்து" என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன், உனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தான், இந்த விளம்பரத்தை வாங்கினேன் என்ற பின் குறிப்பு ஒன்றையும் ஜென்னி என்ற பெண் அதில் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு பக்க நீள விளம்பரத்திற்கு அதிக மதிப்பிலான பணமும் தேவைப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜென்னி என்ற பெண், ஸ்டீவ் குறித்து உலகம் அறிய சொன்ன இந்த விஷயம், இந்த செய்தித்தாளை படிப்பவர்கள் மத்தியில் நிறைய கேள்விகளை எழுப்பி இருந்தது.
யார் இந்த ஜென்னி மற்றும் ஸ்டீவ் என்றும், ஸ்டீவ் அப்படி என்ன செய்தார் என்றும் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். அப்படி ஒரு சூழ்நிலையில், அந்த செய்தித்தாள் நிறுவனத்திற்கும் இது தொடர்பாக நிறைய பேர் கேள்விகளை எழுப்ப, அதற்கு அந்த நிறுவனம் தற்போது பேஸ்புக்கில் விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது.
அதன்படி, "ஸ்டீவ் யார் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், கண்டிப்பாக அவர் மோசமானவர் என தெரிகிறது. அதே போல, ஜென்னி குறித்து எந்த விவரங்களையும் நாங்கள் வெளியிட மாட்டோம். மேலும், குறித்த கிரெடிட் கார்டில் இருந்து கட்டணம் வசூலிக்கவில்லை" என தெரிவித்துள்ளது.
செய்தித்தாள் தரப்பில் இப்படி ஒரு விளக்கம் வந்த பிறகும், ஜென்னி மற்றும் ஸ்டீவ் யார் என்பதை தொடர்ந்து நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். தனது பார்ட்னர் ஒருவர், தன்னை ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டு, நிறைய பணமும் செலவு செய்வது இப்படி ஒரு விளம்பரத்தினை பெண் கொடுத்த சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 42 வருசத்துக்கு முன்னாடி காணாம போன பெண்.. இத்தனை நாளா தேடிட்டு இருந்த குடும்பம்.. "கடைசி'ல இப்ப ஒரு உண்மை தெரிய வந்துருக்கு.."
- கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காதல் கடிதம்.. திறந்து பார்த்தப்போ உள்ள இருந்த ரகசிய செய்தி.. ஷாக் ஆகிப்போன இளம்பெண்..!
- "மனைவி போன் எடுக்கமாட்டேங்குறா.." வெளிநாட்டில் இருந்து பதற்றத்தில் அழைத்த கணவர்.. ஓடி போய் பாத்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
- அதிவேகமாக பயணித்த ரோலர் கோஸ்டர்.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்.. மொத்த தீம் பார்க்கும் அதிர்ந்து போய்டுச்சு..!
- "பூஜை செஞ்சா.. மாமியார் - மருமகள் சண்டை நீங்கும்.. நகை 2 மடங்காகும்".. நூதனமாக உருட்டிய ஆசாமி.. நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்..!
- "30 வருசமா இத யாரும் கவனிக்கலயா?".. பாட்டியின் கல்லறையில் இருந்த வார்த்தை.. முதல் தடவ பாத்ததும் தலை சுற்றி போன 'பேத்தி'
- லாட்டரியில் அடிச்ச ஜாக்பாட்.. மொத்த பணத்தையும் கிழிச்சு கழிவறையில் வீசிய பெண்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு லெட்டர் தானாம்..!
- "ராத்திரில சூட்கேசுடன் நின்ன இளம்பெண்".. கரெக்ட்டா வந்த போலீஸ்.. கணவனை பிரிந்து காதலருடன் லிவிங் டுகெதரில் இருந்த பெண் செஞ்ச பயங்கரம்..!
- விட்டு விட்டு எரியும் லைட்.. தோன்றி மறையும் உருவம்.. பீதியை கிளப்பும் இளம்பெண் 'வீடு'!!.. "உள்ள போகவே கால் நடுங்குமாம்"..
- "ஆண் பிள்ளை தான் வேணும்னு.. 8 வருஷமா இப்படி பண்றாங்க.. என்னால தாங்க முடியல".. அமெரிக்காவில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு.!