ஆக்ஸ்போர்டு University'ல் பட்டம் பெற்ற இந்திய பெண்.. தாத்தா பட்ட கஷ்டம் பத்தி போட்ட பதிவு.. "படிச்சவங்க எல்லாரும் கலங்கி போய்ட்டாங்க"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நிலையில், இது தொடர்பாக அவர் பகிர்ந்த Linkedin பதிவு ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | கணவருக்கு இருந்த நோய்.. எந்த Test'ம் பண்ணாம கண்டுபிடித்த மனைவி.. "எப்படின்னு தெரிஞ்சு ஒட்டுமொத்த மருத்துவர்களும் திகைச்சு போய்ட்டாங்க"

Juhi Kore என்ற இந்திய இளம்பெண் ஒருவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் Comparative Social Politics டிகிரியை முடித்துள்ளார்.

தொடர்ந்து, சமீபத்தில் பட்டமளிப்பு விழாவில் ஜூஹி கோரே கலந்து கொண்டு தான் பட்டம் பெற்றது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், தன்னுடைய பதிவில் தனது தாத்தா கல்வி பெற எப்படி போராடினார் என்பது பற்றியும் சில உருக்கமான கருத்துக்களை தனது பதிவில் ஜூஹி கோரே குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த ஜூஹியின் பதிவில், "1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இங்குள்ள அனைத்து குடிமகன்களுக்கும் சுதந்திரமாக வாழ வழி கிடைக்கவில்லை. அப்படி மகாராஷ்டிராவில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த இளம் சிறுவன் ஒருவரை இரண்டு காரணங்களால் அவரது குடும்பத்தினர் பள்ளிக்கு அனுப்பவில்லை.

தாழ்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், பள்ளியில் அவர் எப்படி நடத்தப்படுவார் என்ற காரணத்திற்காக பயந்த அவரின் குடும்பம், பள்ளிக்கு அனுப்பவில்லை. இனியொரு காரணம், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரை வேலைக்கும் அனுப்பியது" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ஜூஹியின் தாத்தா, அதிகாலை 3 மணிக்கு எழுந்து வேலைக்கு செல்லவும், அதன் பின்னர் காலையில் செல்லவும் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கி உள்ளார். ஆனால், பள்ளிக்கு சென்ற ஜூஹியின் தாத்தாவை பள்ளியில் உட்கார கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பல்வேறு இன்னல்களை சந்தித்த ஜூஹியின் தாத்தா, ஆங்கிலம் கற்று இளங்களையில் சட்டப் படிப்பும் முடித்துள்ளார். இறுதியில், அரசு உயர் அதிகாரி பதவியில் இருந்து ஓய்வும் பெற்றுள்ளார் ஜூஹியின் தாத்தா. கல்வியின் முக்கியத்துவத்தை தனக்குள் தனது தாத்தா விளைத்ததாகவும், தான் பட்டம் பெற்றதை தற்போது பெருமையுடன் வெளிப்படுத்துவதாகவும் ஜூஹி கோரே குறிப்பிட்டுள்ளார்.

தனது தாத்தா நினைத்தது போல படிக்க முடியாமல் சிரமப்பட்டு அதில் வெற்றி கண்ட நிலையில், தற்போது பட்டம் பெற்றுள்ள பேத்தி, தாத்தாவை நினைவு கூர்ந்த சம்பவம் தொடர்பான பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | இளம்பெண்ணுக்கு பிறந்த அச்சு அசல் ட்வின்ஸ்.. 2 குழந்தைக்கும் வேற வேற அப்பா.!. வியப்பில் ஆழ்ந்த மருத்துவர்கள்!!

WOMAN, DEGREE, OXFORD, GRANDPA, UNIVERSITY OF OXFORD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்