"ஆண் பிள்ளை தான் வேணும்னு.. 8 வருஷமா இப்படி பண்றாங்க.. என்னால தாங்க முடியல".. அமெரிக்காவில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கணவர் துன்புறுத்துவதாக கூறி, அமெரிக்காவில் வசித்துவந்த இந்திய பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் வசித்துவருபவர் ஜஸ்பால் சிங். இவருடைய மகள் மன்தீப் கவுர். இவருக்கும் அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ்னோத்பீர் சிங்குக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பிறகு தனது கணவருடன் அமெரிக்கா சென்றிருக்கிறார் மன்தீப் கவுர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனால், ஆண் குழந்தை வேண்டும் என தன்னை தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்ததாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார் மன்தீப்.

ஆண் பிள்ளை

திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் ஆண் குழந்தையை பெற்றுத் தரவில்லை என தனது கணவர் தன்னை தாக்கி வருவதாகவும், அதனை தன்னால் தாங்க முடியவில்லை எனவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இதனையடுத்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பதாகவும் தனக்கு வேறு வழி தெரியவில்லை எனவும் கண்ணீருடன் கூறியிருந்தார் அவர். இந்த வீடியோவை சீக்கிய சமூகப் பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைக்கு எதிரான ‘தி கவுர் மூவ்மென்ட்’ அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.

முன்னதாக, தனது கணவர் ஒரு ட்ரக்கினுள் 5 நாட்கள் தன்னை அடைத்து வைத்ததாக மந்தீப் கவுர் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அப்போது தன்னை மன்னித்துவிடுமாறு கணவர் கெஞ்சியதால் புகாரைத் திரும்பப் பெறச் செய்திருக்கிறார் மன்தீப் கவுர்.

விபரீத முடிவு

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி மன்தீப் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். அதற்கு முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில்,"எட்டு வருடங்களாகத் தொடர்ந்து அடி உதை. என்றாவது ஒரு நாள் அவர் திருந்துவார் என எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். ஆனால், என்னால் இப்போது இவற்றைத் தாங்க முடியவில்லை. அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களை விட்டு பிரிகிறேன்" என கண்ணீருடன் பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தவே, மன்தீப் கவுருக்கு ஆதரவாக இந்திய மக்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

INDIAN, WOMAN, USA, ஆண் பிள்ளை, இந்தியப்பெண், அமெரிக்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்