"என்னுடைய பெரிய மார்பகங்களை பார்த்து எல்லோரும் கிண்டல் பண்றாங்க" - இளம்பெண் எடுத்த துணிச்சல் முடிவு..!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண்ணின் மார்பகங்களை கவர்ச்சியாக மட்டுமே பார்க்கும் இந்தக் காலத்தில் மார்பகங்கள் காரணமாக பெண்கள் சந்திக்கும் உடல் மற்றும் உளச் சிக்கல்கள் குறித்து யாருமே சிந்திப்பது கூட கிடையாது. பழங்காலத்தில் பிஞ்சுக் குழந்தைகளின் பசியினைப் போக்குவதால் பெண்களின் மார்பகத்தை மிக உயர்ந்ததாகக் கருதினர். ஆனால், அதே மார்பகம் காரணமாக தற்போது பெண்கள் கிண்டலுக்கும் கேலிக்கு உள்ளாகிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த கார்ட்லி ஸ்மார்ட். நார்தாம்ப்டன்ஷையர் நகரில் வசித்துவரும் இவருடைய வயது 21. அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் ஸ்மார்ட் பணிபுரிந்துவருகிறார்.
கார்லியின் மார்பக அளவு 36 அங்குலமாக இருந்திருக்கிறது. இது அவரது வயது, உயரம் மற்றும் எடையுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரியது. இந்த மார்பகங்கள் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் சில நேரங்களில் தனக்கு முதுகுத் தண்டில் வலி ஏற்படுவதாகவும் கார்லி சோகத்துடன் குறிப்பிடுகிறார்.
கிண்டல், கேலி..
உணவுகளை பரிமாறும் வேளைகளில் அவருடைய மார்பகங்களில் அடிபடுவதை பலரும் கிண்டல் செய்திருப்பதாகவும், "உன் மார்பகம் பட்டு கண்ணாடி உடைந்துவிடப் போகிறது" என சக பணியாளர்கள் கேலி செய்கையில் தனக்கு மிக அவமானமாக இருக்கும் என கார்லி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்," என்னுடைய மார்பகங்களின் எடை 9 கிலோ. இதனால் நான் பல கிண்டல்களை எதிர்கொண்டிருக்கிறேன். மார்பகங்களின் அளவு காரணமாக ப்ரா அணிவது காயங்களை ஏற்படுத்துகிறது. மார்பகங்களுக்கு கீழே ஏற்பட்டுள்ள காயங்களை பார்க்கும்போது சிக்கன் குனியா தாக்கியதைப்போல உணர்கிறேன்" என்கிறார்.
அறுவை சிகிச்சை
தன்னுடைய உடல் நலம் மற்றும் மன நலத்தை கருத்தில்கொண்டு மார்பகங்களை சிறிதாக்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார் கார்லி. இருப்பினும், இவருடைய BMI (Body mass index) 25க்கும் குறைவாக இருந்ததால் அவருடைய அறுவை சிகிச்சை கோரிக்கையை பிரிட்டன் தேசிய சுகாதார சேவை நிராகரித்துவிட்டது.
ஆனாலும், கிரவுட் பண்டிங் எனப்படும் மக்களிடம் பண உதவி பெற்று மார்பக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நிதி திரட்டி வருகிறார் கார்லி. பெரிய மார்பகங்களை பார்த்து கிண்டல் செய்பவர்களுக்கு என்னுடைய வலிகள் புரிவதில்லை என அவர் சொல்வது மனிதத்தை உலுக்கும் சொற்களாக உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முதல் குழந்தை பிறந்து 8 மாசம் தான் ஆச்சு.. அதுக்குள்ள 2-வது குழந்தை.. அது எப்படி சாத்தியம்? பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட காரணம்
- வழுக்கை தலையுடன் மகாராணி எலிசபெத் சிலை.. ஏன் முடி இல்லாம சிலைய செய்தோம்னா.. மியூசியத்தின் நிர்வாகி அளித்த விளக்கம்
- ஒரு சிலந்தியால தலைகீழா புரட்டி போடப்பட்ட வாழ்க்கை.. சின்ன 'சிலந்தி'னு அசால்ட்டா இருந்துட்டேன்.. உருக்கமான வேண்டுகோள் விடுத்த பெண்
- ரூ.500-க்கு வாங்கிய Chair-ஐ ரூ.16 லட்சத்துக்கு விற்ற பெண்.. ‘நீங்க நம்பலனாலும் அதான் நெசம்’.. அப்படியென்ன ஸ்பெஷல்..?
- யோவ்.. எனக்கு பசிக்குதுயா.. ஆசையா இருந்தேன், இப்படி சாப்பிட விடாம பண்ணிட்டீங்களே, நல்லா இருப்பீங்களா? கதறும் பெண்
- தூங்குவது, சாப்பிடுவது, நடப்பது ரிப்பீட்டு.. 190-வது பிறந்தநாளைக் கொண்டாடும் உலகின் வயதான ஆமை.. ஹாப்பி பெர்த்டே ஜொனாதன்!
- என் காதலிய காப்பாத்துங்க.. சைக்கிளோடு மலையில் இருந்து விழுந்த பெண்.. கண்ண மூடிட்டு திறந்து பார்த்தா பெரிய அதிசயமே நடந்துருக்கு!
- மனசுக்குள் இருந்த ரகசியம்.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனைவி.. கேட்ட உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தெறித்து ஓடிய கணவன்
- இந்திய அணியை சீண்டிய வாகன்.. பங்கமாக வச்சு செஞ்ச வாசிம்.. உங்களுக்கு இது தேவையா பாஸ்
- ஒரு கிறிஸ்துமஸ் மரம் அலங்கரித்ததற்கு 89 ஆண்டுகள் சிறையா? இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்; அப்படி என்னதான் நடந்துச்சு?