'இன்சூரன்ஸ் பணத்தை எடுக்க பெண் ஒருவர் போட்ட மாஸ்டர் பிளான்'... 'பல நாடுகளுக்கு சொகுசு பயணம்'... பகீர் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்சூரன்ஸ் பணத்தைப் பெறப் பெண் ஒருவர் போட்ட திட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் சீமா கர்பாய். இவர் கடந்த 2008 மற்றும் 2009ல் அமெரிக்காவிற்குச் சென்று காப்பீடு திட்டங்களை எடுத்துள்ளார். பின்னர் திடீரென அவர் இறந்து விட்டதாகக் கூறிய அவரது பிள்ளைகள், இறப்பு சான்றிதழை எடுத்துள்ளார்கள். அதோடு அந்த சான்றிதழை வைத்து 23 கோடி ரூபாய் காப்பீடு பணத்தையும் பெற்றுள்ளார்கள். ஆனால் அந்த சான்றிதழ்கள் எல்லாம் போலியானவை.

இந்நிலையில் இறந்ததாகக் கூறப்பட்ட அந்த பெண் தற்போது உயிருடன் இருப்பதாகவும், இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சொகுசு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து முறையான விசாரணை பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது.

இதனிடையே இன்சூரன்ஸ் பணத்தைப் பெறப் பெண் திட்டம் போட்ட நிலையில், அதற்கு அவரின் பிள்ளைகளும் உடந்தையாக இருந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்