100 வருசம் பழமையான டயரி மில்க் சாக்லேட் கவர்.. பலகைக்கு அடியே பார்த்ததும் மிரண்டு போன பெண்.. வைரல் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம் அவ்வபோது இணையத்தில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் வைரல் ஆவதை நாம் கவனித்திருப்போம்.
Images are subject to © copyright to their respective owners
அப்படி வைரலாகும் விஷயங்கள், இயல்பாக நடக்கும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு வினோதமாகவோ, அதிர்ச்சி கலந்தோ அல்லது கலகலப்பான விஷயமாகவோ, வியப்பூட்டும் வகையிலோ இருக்கும் போதும் அவை இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாக மாறி பலரது கவனத்தை பெறவும் செய்யும்.
அந்த வகையில் நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு செய்தி தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
100 வருஷம் பழமையானது
பொதுவாக பல ஆண்டுகளுக்கு முன்புள்ள ஏதாவது பொருட்கள் எதிர்பாராத நேரத்தில் சிலர் கையில் கிடைக்கும் போது அது ஒரு வித சிலிர்ப்பை நமக்குள் கடத்திச் செல்லும். அப்படி ஒரு சம்பவம் தான் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners
UK -வின் டெவான் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் எம்மா யங் (Emma Young). இந்தப் பெண்ணிற்கு தற்போது 51 வயதாகும் சூழலில் இவர் சுமார் நூறு ஆண்டுகள் பழமையான டைரி மில்க் Wrapper ஒன்றை தனது வீட்டை புதுப்பிக்கும் சமயத்தில் கண்டெடுத்துள்ளார்.
பலகைக்கு அடியே இருந்த கவர்
அவரது வீட்டின் பாத்ரூமில் உள்ள ஃப்ளோரில் உள்ள தரைப் பலகைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றது. அப்போது அதிலிருந்த தூசியை சுத்தம் செய்யும் சமயத்தில், பலகைகளுக்கு அடியில் ஒரு டைரி மில்க் சாக்லேட்டின் Wrapper இருந்துள்ளதை கவனித்துள்ளார். அதற்குள் சாக்லேட் இல்லை என்ற சூழ்நிலையிலும், பழைய வீட்டில் இப்படி டைரி மில்க்கின் கவர் இருப்பது அவரை சற்று வியப்படைய வைத்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners
அது மட்டுமில்லாமல் இது எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ளவும் எம்மா யங்கிற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாக்லேட் விற்பனை நிலையம் சென்று இது பற்றி கேட்டபோது அது 1930 - 34 ஆண்டுகள் காலக்கட்டத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
வியப்பில் ஆழ்ந்த பெண்
மேலும் அந்த சாக்லேட்டின் தற்போதைய கண்டிஷன் தான் தன்னை திகைக்க வைத்தது என்றும், இத்தனை ஆண்டுகள் கடந்தும் அழகாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் எம்மா யங். ஒரு பக்கம் எலிகளால் அந்த கவர் மெல்லப்பட்டிருக்கும் சூழலில் மற்றொரு புறம் அழகாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
அதேபோல ஒரு சாக்லேட் கவரினை வெறுமென கடந்து செல்ல முடியாமல், ஒரு வரலாற்று விஷயமாகவும் பார்க்கும் எம்மா யங், இதனை விரைவில் ஃபிரேம் செய்து வீட்டில் வைக்கவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். நூறாண்டுகள் பழமை வாய்ந்த டைரி மில்க் சாக்லேட்டின் கவர் கிட்டத்தட்ட அதே நிலையில் கிடைத்துள்ளது தற்போது அந்த சாக்லேட் பிரியர்களின் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஆர்டர் செஞ்சது சுகர் டெஸ்ட் பண்ற கருவி.. ஆனா, வீட்டுக்கு வந்த பார்சல்'ல இருந்தது.." ஓப்பன் செய்ததும் திகைத்து போன முதியவர்
- 'இந்த நேரத்துல சாக்லெட் கேட்டா...' 'நான் எங்க போவேன் டியர்...' 'நள்ளிரவில் சாக்லெட் கேட்ட காதலி...' - காதலிய இம்ப்ரஸ் பண்ண போய் கடைசியில இப்படி ஆயிடுச்சு...!
- 'குச்சி மிட்டாய்னு நினச்சு ஜெலட்டின் குச்சியை கடித்த சிறுவன்...' 'கடிச்ச உடனேயே வெடிச்சுடுச்சு...' 'கடைசியில காவிரி ஆற்றுக்கு கொண்டு போய்...' நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்...!
- '4 வயது குழந்தையை...' 'சாக்லேட் வாங்கிக் கொடுத்து...' பாலியல் தொந்தரவு செய்த கோவில் பூசாரி...!
- 'சாக்லேட் வச்சுருக்கேன், இங்க வா...' 'விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை...' பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!
- 'டேய் அந்த சாக்லேட் ரொம்ப காஸ்ட்லிடா... அப்படின்னா தூக்குடா' ' ஆட்டைய போட்டதை பார்த்த காவலர்...' நண்பர்களால் நடந்த விபரீதம்...!
- 'எது, 'சாக்லேட்' சாப்பிட்டா 'லவ்' ஆக்டிவேட் ஆகுமா?!'... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!
- 'கேக் உண்ணும் போட்டி'... 'அவசர அவசரமாக சாப்பிட்ட பெண்மணி'... 'வலிப்பு வந்து நேர்ந்த பரிதாபம்'!
- ‘இன்னும் அற்புதமான மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க!’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்!’..
- ‘குட்டையில் சடலமாக மிதந்த இளம்பெண்’.. ‘அருகே சிதறிக் கிடந்த துணி, சாக்லேட்’.. ‘தகாத உறவால் நடந்த விபரீதம்’..