"மொபைல் போன இப்டி கூட 'Unlock' பண்ணலாமா??.." வினோத செயலில் ஈடுபட்ட இளம்பெண்.. வைரலாகும் வீடியோ

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இளம்பெண் ஒருவர் தன்னுடைய செல்போனை அன்லாக் செய்ய வேண்டி, வினோத செயலில் ஈடுபட்ட வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

பொதுவாக, ஒரு நபர் தன்னுடைய செல்போனை நம்பர் லாக் கொண்டோ, ஃபேஸ் லாக் கொண்டோ, அல்லது விரல் ரேகை மூலமோ அன்லாக் செய்து கொள்வார்கள்.

அப்படி, அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன்னுடைய போனை அன்லாக் செய்ய வேண்டி, ஈடுபட்ட விஷயம் தான் நெட்டிசன்கள் மத்தியில் அதிக கருத்துக்களை சம்பாதித்து வருகிறது.

வினோத காரியம்

அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் வசித்து வருபவர் தான் மிலா மோனட். இவர் தன்னுடைய தோழிகள் சிலருடன் இணைந்து, விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பலரும் சூழ்ந்து இருக்க, மிலா ஒரு வினோதமான காரியத்தை செய்ய துணிந்துள்ளார்.

Unlock செய்த முறை

தன்னுடைய மொபைல் போனை வெளியே எடுத்த மிலா, தன்னுடைய பாஸ் வேர்டு எண்ணின் அடிப்படையில், ஒவ்வொரு எண்ணின் மீதும், வரிசையாக, அதுவும் சரியாக தன்னுடைய உமிழ் நீரை (Saliva) துப்ப தொடங்குகிறார். மொத்தம், ஆறு எண்கள் மீதும், வரிசைப்படி மிலாவும் எச்சில் துப்ப, மொபைல் போனும் சரியாக அன்லாக் ஆகிறது.

வைரலான வீடியோ

மொபைலும் சரியாக திறந்ததும், மேலே தலையை தூக்கி சுற்றி இருந்தவர்களை பார்த்து சிரித்த மிலா, தனது வாயின் ஓரத்தில் இருந்த எச்சிலையும் துடைக்கிறார். இந்த நிகழ்வினை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து, அதனை இணையத்தில் வெளியிட, மிகவும் வேகமாக இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக தொடங்கியது.

ஒரு பக்கம், மக்கள் பலரும் அந்த பெண்ணின் வினோதமான செயல் பற்றி, பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

WOMAN, PHONE UNLOCK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்