"என் கணவருக்கு 3 துணைவிகள் வேணும்".. "அவங்களோட சண்டை போட மாட்டேன்" .. இணையத்தில் சுயம்வரம் நடத்தும் மனைவி..
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவருக்காக மூன்று துணைகளை தேடி வரும் சம்பவம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியை சேர்ந்தவர் Pattheema. இவர் தான், தனது கணவருக்கு மூன்று துணைவிகள் வேண்டும் என தற்போது இணையத்தில் தேடி வருகிறார்.
இது குறித்து அந்த பெண் பகிர்ந்த தகவலின் படி, "ஒரு சில நிபந்தனைகள் மட்டும் தான். பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும். படித்திருக்க வேண்டும். மூன்று பெண்களுக்கும் மாதம் சுமார், £342 சம்பளம் (இந்திய மதிப்பில் 33 ஆயிரம் ரூபாய்) வழங்கலாம். இரண்டு பேர் எனது கணவனின் அலுவலக பணிகளில் உள்ள வேலைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். மற்றொருவர் என்னையும் எனது கணவர் மற்றும் குழந்தைகளையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்" என Pattheema குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல், அந்த மூன்று பெண்களிடமும் தான் நிச்சயம் சண்டை போட மாட்டேன் என உத்தரவாதம் தருவதாகவும், எனது கணவரே அவர் யாருடன் தூங்க வேண்டும் அல்லது தங்க வேண்டும் என்பதை தேர்வு செய்வார் என்றும் Pattheema கூறி உள்ளார். தன் சொந்த மனைவியே தனது கணவருக்காக மூன்று துணைவிகளை ஆன்லைனில் தேடி வரும் சம்பவம் அதிகம் பேசுபொருளாக மாறி இருந்தது. ஆனால் ஏன் அப்படி தனது கணவருக்காக மூன்று பெண்களை Pattheema தேடிக் கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் விளக்கி உள்ளார்.
Pattheema மற்றும் அவரது கணவர் இணைந்து, பிசினஸ் ஒன்றை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், நீண்ட நாட்களாக தொடர்ந்து மன அழுத்தத்தின் மூலம் Pattheema அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தனது கணவருடன் அவரால் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை என்றும், அவருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தன்னால் தனது கணவரை சிறந்த முறையில் பார்த்துக் கொள்ள முடியாது என Pattheema-வுக்கு தோன்றிய பிறகு தான், அதற்காக மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து கணவரின் துணைவியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார்.
அப்படி தேர்வு ஆகும் பெண்கள், தனது கணவருடன் மிகச் சிறந்த முறையில் நேரத்தை கழிக்க வேண்டும் என்றும் அவருக்கு மிகவும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதும் தான், Pattheema-வின் விருப்பமாக உள்ளது.
இது பற்றி பேசும் அவரது கணவர், முதலில் எனது மனைவியின் முடிவைக் கேட்டு சற்று அதிர்ச்சி அடைந்தேன் என்றும், ஆனால் எனது மனைவி இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதால் அதனை நான் நிராகரிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 3 துணைவிகளை கணவருக்காக தேடி வரும் Pattheema, இதுவரை இரண்டு பேரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பொண்டாட்டியுடன் சேர்த்து வைங்க.. இல்லைன்னா".. செல்போன் டவரில் ஏறிய இளைஞர்.. டக்குன்னு போலீஸ் எடுத்த முடிவு.. பரபரப்பான சென்னை..!
- "3 நாள் லீவு வேணும்.." உயர் அதிகாரிக்கு வாலிபர் எழுதிய 'கடிதம்'.. 'மனைவி' பத்தி அவர் எழுதுன காரணம் தான் 'ஹைலைட்டே'!!
- காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண்.. ஒரே மாசத்துல நடந்த அதிர்ச்சியான சம்பவம்.. காலைல தோட்டத்துக்கு போனவர் கண்ட பயங்கர காட்சி..!
- மனைவிக்கு தெரியாம இரண்டாவது கல்யாணம் செஞ்ச நபர்.. தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்.. நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!
- "என்னை கேக்காம ஏன் வெள்ளைப்பூண்ட Cut பண்ண.?".. கோபத்துல கணவன் செஞ்ச காரியம்.. உறைந்த உறவினர்கள்.. நீதிமன்றம் அதிரடி..!
- மனைவி மறைந்த அடுத்த கணமே 91 வயது முதியவருக்கு ஏற்பட்ட சோகம்.. மரணத்திலும் மனைவியை கைவிடாத பாசமிகு கணவர்.. !
- கல்யாணமாகி 3 வது நாளே சுயரூபத்தை காட்டிய மனைவி.. கலங்கிப்போன கணவன்.. போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்த உண்மை..!
- ஆண்மை குன்றியவர் என்பதை மறைத்து.. 200 பவுன் நகை வாங்கி திருமணம்.. பெண் அளித்த புகார்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- "என் பொண்டாட்டி கடல்ல விழுந்துட்டா".. துடிச்சுப்போன கணவன்..மொத்த படையையும் இறக்கிய போலீஸ்.. 2 நாளுக்கு அப்பறம் ஏற்பட்ட டிவிஸ்ட்..!
- "48 வருஷம் ஒண்ணா வாழ்ந்துட்டோம், இப்போ.." கணவர் இறந்த அடுத்த சில மணி நேரத்தில்.. மனைவிக்கும் நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்