'ஹோட்டல் அறையில்.. போதை மயக்கத்தில் இருந்து கண் முழிச்சு பார்த்ததும்'.. கையில் கேமராவுடன் நின்ற நபர்!.. பெண்ணின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டனில் பெண் ஒருவரை 62 வினாடிகள் வீடியோ எடுத்து அவருடைய வாழ்வை பாழாக்கிய நபரின் செயல் அதிரவைத்துள்ளது.

Emily Hunt (41) என்கிற பெண் கிழக்கு லண்டனில் உள்ள சொகுசு ஹோட்டலுக்கு ஒன்றுக்கு தன் தந்தையுடன் சென்றுள்ளார். ஆனால் 10 மணிக்கு மேல் ஹோட்டல் அறையில் மயக்கத்தில் கிடந்துள்ளார்.

அப்போது கண் விழித்த அவர், “நான் எப்படி இங்க வந்தேன்” என்று குழம்பிப் போயுள்ளார். அதுமட்டுமின்றி அதே அறையில் நைசாக நுழைந்து Christopher Killick(40) என்கிற நபர்,  Emilyக்கு போதை மருந்துகொடுத்து அவரை அந்த மோசமான நிலையில் வீடியோ எடுத்தது சிசிடிவி மூலம் தெரியவந்தது. இதனால் Emily அதிர்ந்துள்ளார். பின்னர் Christopher Killick கைது செய்யப்பட்டார்.  இதுபற்றி பேசிய Emily தனது மனதை பலவீனப்படுத்திய இந்த சம்பவத்துக்கு பின்னர் தனக்கு தற்கொலை எண்ணம் கூட தோன்றியதாகவும், வேலையை இழந்த தனது வாழ்வை கடந்த 5 ஆண்டுகளாக இந்த சம்பவம் புரட்டிப்போட்டதாகவும் பாழாக்கியதாகவும் தெரிவித்துளார்.

இந்நிலையில் Christopher மீதான இவ்வழக்கில் நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பின்படி, 5 ஆயிரம் பவுண்டுகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு Christopher வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் 30 மாத சமூக மறுவாழ்வு அமர்வுகளில் Christopher கலந்துகொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து 5 ஆண்டுகள் குற்றவாளிகள் பதிவேட்டில் Christopher கையெழுத்து போட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்