அதிவேகமாக பயணித்த ரோலர் கோஸ்டர்.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்.. மொத்த தீம் பார்க்கும் அதிர்ந்து போய்டுச்சு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனியில் உள்ள தீம் பார்க் ஒன்றில் ரோலர் கோஸ்டரில் பயணித்த பெண் ஒருவர் தவறிவிழுந்து உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சீனாவில் பரவும் புதிய வகை 'Langya' வைரஸ்..? - இதுவரை தொற்று பாதித்துள்ள விபரம்..!

ரோலர் கோஸ்டர்

பொதுவாகவே ரோலர் கோஸ்டரில் பயணிப்பது என்பது பலருக்கும் பிடித்திருக்கும். சாகச பிரியர்களுக்கு விருப்பமான இந்த பயணம், எப்போதும் நாம் நினைத்தபடியே அமைவதில்லை. ரோலர் கோஸ்டரில் பயணிப்பவர்கள் சந்திக்கும் முதல் சிக்கலே அதன் அதீத உயரம் தான். வளைந்து நெளிந்து ஆகாயத்தை தொட்டு பயணிக்கும் இந்த ரோலர் கோஸ்டரை துல்லியமாக வடிவமைத்திருப்பார்கள். இதில் பயணிக்கும் மக்கள் கொஞ்சம் அஜாக்கிரைதையுடன் இருந்தாலும் மோசமான விபத்தினை சந்திக்க நேரிடலாம்.

அந்த வகையில் ஜெர்மனியின் க்ளோட்டனில் உள்ள க்ளோட்டி வனவிலங்கு மற்றும் ஓய்வு பூங்காவில் கடந்த சனிக்கிழமை அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இங்குள்ள ரோலர் கோஸ்டரில் பயணித்த 57 வயதான பெண் ஒருவர் சுமார் 26 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கிறார். இதனையடுத்து அவசரநிலை பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இருப்பினும் அவர் அங்கேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

சோகம்

இதனையடுத்து பெண்மணியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அதனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இதில் குற்றவியல் நடவடிக்கைகள் இருப்பதாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்திருக்கின்றனர். ரோலர் கோஸ்டரில் இருந்து பெண் ஒருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்ததை தொடர்ந்து அந்த பார்க் மூடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அந்த பார்க் நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,"உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பதால், அடுத்த சில நாட்களில் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை எங்களால் இன்னும் மதிப்பிட முடியவில்லை. புரிதலுக்கு நன்றி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இதுபற்றி காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் அந்த பெண்மணி ரோலர் கோஸ்டர் பயணத்தின் போது, தனது இருக்கையின் அடுத்த முனைக்கு செல்ல முயற்சித்ததாகவும் அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read | "பூஜை செஞ்சா.. மாமியார் - மருமகள் சண்டை நீங்கும்.. நகை 2 மடங்காகும்".. நூதனமாக உருட்டிய ஆசாமி.. நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்..!

WOMAN, ROLLERCOASTER, FALLS, ரோலர் கோஸ்டர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்