உயிர் போற 'நெலமை'ல இருக்கேன்... எனக்கு உதவி பண்ணுங்க..." அழுது புலம்பிய 'பெண்'... வாரி வழங்கிய 'மக்கள்'... இறுதியில் தெரிய வந்த 'அதிர்ச்சி' உண்மை!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனின் கென்ட் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நிக்கோல் எல்கப்பஸ் (Nicole Elkabbas). 42 வயதான இந்த பெண்மணி, மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், இதிலிருந்து தான் மீண்டு வர வேண்டுமென்றால் அதிக பணம் தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டு உதவி கோரியிருந்தார்.

இந்த பதிவைக் கண்ட பலர், நிக்கோல் விரைவில் குணமடைய வேண்டி, நன்கொடை அளிக்க ஆரம்பித்தனர் . மொத்தமாக, £52,000 பவுண்டுகள் (சுமார் 50 லட்சம்) நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு கிடைத்த நிதியைக் கொண்டு நிக்கோல் அதன் பிறகு செய்த செயல் தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிக்கோலுக்கு புற்றுநோய் இல்லை என்ற நிலையில், மக்களை ஏமாற்றி பணத்தை சேகரித்துள்ளார். அது மட்டுமில்லாமல், சேகரித்த பணத்தை சூதாட்டத்திலும், தான் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், ஆடம்பரமான இடத்தில் உட்கார்ந்து கால்பந்து ஆட்டத்தைக் காணவும் செலவு செய்துள்ளார்.

தனக்கு அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை, நிக்கோல் தவறாக பயன்படுத்தியதை, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தான், நிக்கோல் மேற்கொண்ட மோசடி தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் பல லட்சம் ரூபாயை சூதாட்டத்தில் அவர் செலவு செய்துள்ளார்.

இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயுடன் போராடுபவர்களை அவமதிக்கும் செயல் என நீதிபதி தெரிவித்த நிலையில், நிக்கோலுக்கு புற்றுநோய் என அறிந்ததும் தனது நெருங்கிய தோழியை புற்றுநோய் மூலம் பறிகொடுத்த பெண்மணி ஒருவர், 6,000 பவுண்டுகளை அள்ளிக் கொடுத்துள்ளார்.

இப்போது நிக்கோல் ஏமாற்றியது தெரிய வந்ததும், இது தனக்கு ஏற்பட்ட அவமானம் என்றும், இனிமேல் யாராவது உதவி என்று கேட்டால், நான் அவர்களை சந்தேகத்துடன் தான் பார்ப்பேன் என்றும் அந்த பெண்மணி கூறியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்