பிங்க் கலர்ல பெயிண்ட் அடிச்சது ஒரு குத்தமா?.. பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ₹19 லட்சம் அபராதம்... வைரல் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்காட்லாந்து நாட்டில் வீட்டின் முன்பக்க கதவுக்கு பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்ததற்காக பெண் ஒருவருக்கு 19 லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள் அந்நாட்டு அதிகாரிகள். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இணையதளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.
ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பரோவின் நியூ டவுன் பகுதியில் வசித்து வருபவர் மிராண்டா ஜாக்சன். 48 வயதான இவர் தற்போது தனது பரம்பரை வீட்டில் வசித்து வருகிறார். 1981 ஆம் ஆண்டு இவரது பெற்றோரால் இந்த வீடு வாங்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஜாக்சன் மிராண்டாவின் பெற்றோர் மரணமடைந்த பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த வீட்டை புனரமைக்க நினைத்திருக்கிறார் அவர்.
இதனையடுத்து புனரமைப்பு வேலைகளும் நடைபெற்றிருக்கின்றன. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட வீட்டை பார்த்து பார்த்து பெயிண்ட் அடித்திருக்கிறார் மிராண்டா. 2 குழந்தைகளுக்கு தாயான அவர் இறுதியில் தான் விரும்பியபடி வேலைகள் முடிவடைந்த பிறகு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் குடியேறியுள்ளார். ஆனால், கொஞ்ச நாளிலேயே அவருக்கு வினோத சிக்கல் வந்திருக்கிறது.
எடின்பர்க் நகர கவுன்சிலில் இருந்து மிராண்டாவிற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், நகரத்தின் பாரம்பரிய முறைகளுக்கு எதிராக வீட்டின் முன்பக்க கதவுகளுக்கு பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. மேலும், உலக பாரம்பரிய இடமாக திகழும் பகுதியின் விதிமுறைகளை மிராண்டா மீறியதாக கூறி 20 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 19 லட்ச ரூபாய்) அபராதமும் விதித்திருக்கிறது அமலாக்கத்துறை.
இதுபற்றி பேசியுள்ள மிராண்டா,"இந்த நோட்டீஸ் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. விதிமுறைகளின்படி வீட்டின் கதவு அடர் நிறத்தில் இருக்க வேண்டுமாம். நான் பிங்க் நிறத்தில் கதவுக்கு பெயிண்ட் அடித்திருந்தேன். எனக்கு அந்த வண்ணம் பிடித்திருந்தது. ஆனால், இதற்காக அபராதமும் விதித்திருக்கிறார்கள். அருகில் உள்ள வீடுகளில் வெவ்வேறு வண்ணங்களில் பெயிண்ட் அடித்திருக்கின்றனர். அதுபற்றி நான் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால், அவை குறித்து யாரேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகிறார்கள்" என்றார்.
இந்நிலையில், வீட்டின் முன்பக்க கதவுக்கு வெள்ளை நிறம் அடிக்குமாறு பரிந்துரை செய்த நகர கவுன்சில் அதற்கு நவம்பர் 7 ஆம் தேதி வரை அவகாசமும் கொடுத்துள்ளது. இருப்பினும் தனது வீட்டு கதவுக்கு சிவப்பு நிற பெயிண்ட் அடிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார் மிராண்டா.
மற்ற செய்திகள்
ஒரே இடத்தில் கூடிய 178 பேர்.. எல்லாரோட பெயர்ல இருந்த Common விஷயம்.. "கின்னஸ் சாதனையே படைச்சுடுச்சு"
தொடர்புடைய செய்திகள்
- நடு காட்டுக்குள்ள 50 வருஷமா நிற்கும் மர்ம ரயில்.. தேடிக்கண்டுபிச்ச நபர் பக்கத்துல போனபோது ஒருநிமிஷம் ஷாக் ஆகிட்டாரு..!
- ராணியின் மறைவிற்கு பிறகு வெளியிடப்பட்ட புதிய நாணயங்கள்.. அதுல இருந்த விஷயத்தை பார்த்து குழம்பிய மக்கள்.. ஆனா 400 வருஷமாவே இப்படித்தானாம்..!
- அரசர் சார்லஸிடம் ஒப்படைக்கப்பட்ட புகழ்வாய்ந்த Red Box.. அப்படி என்ன இருக்கும் அதுக்குள்ளே..? அரச குடும்பம் வெளியிட்ட புகைப்படம்..!
- சேத்துவச்ச காசை எல்லாம் போட்டு ஏற்பாடு செய்த திருமணம்.. முந்துன நாள் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை.. கடைசிநேரத்துல பொண்ணு செஞ்ச விஷயம் தாங்க..!
- இங்கிலாந்து அரசருக்கு சொந்தமான ரகசிய தீவில் இருக்கும் சொகுசு வீடு.. கடலுக்கு நடுவுல இவ்வளவு வசதிகளா.. சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்..!
- கணவருக்கு இருந்த நோய்.. எந்த Test'ம் பண்ணாம கண்டுபிடித்த மனைவி.. "எப்படின்னு தெரிஞ்சு ஒட்டுமொத்த மருத்துவர்களும் திகைச்சு போய்ட்டாங்க"
- உலகத்தின் Secret- ஆன பதுங்கு குழி.. பார்த்து பார்த்து கட்டிருக்காங்க.. எல்லாமே பக்கா பிளான்.. மிரள வைக்கும் பின்னணி..!
- "என்ன நடந்துச்சுன்னு இந்நேரம் வரை மர்மமாவே இருக்கு".. அடுத்தடுத்து சரிந்த 20 பேர்.. உடனே மூடப்பட்ட தீம்பார்க்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
- "உங்களுக்கு 8 கோடி ரூபாய் ஜாக்பாட் அடிச்சிருக்கு'.. தம்பதிக்கு வந்த மெயில்.. ஏமாத்துறாங்கன்னு நெனச்சவங்களுக்கு காத்திருந்த ஷாக்..!
- "சுத்தி 128 பிளாட்'ல இவரு தான் ஒரே ஆளு.." தனியாக வாழும் முதியவர்.. "இப்போ பேய் நகரம் மாதிரி இருக்காம்.."