‘அப்பவே இத முடிவு செஞ்சிட்டேன்’!.. ‘பிறந்த 3 மணிநேரத்தில் இறந்த குழந்தை’.. தாயின் உருக்கமான பதிவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிறந்த 3 மணிநேரத்தில் குழந்தை இறந்த நிலையில் தாய்ப்பாலை தானமாக கொடுத்தது குறித்து பெண் ஒருவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தை சேர்ந்தவர் சியாரா ஸ்ட்ராங்ஃபீல்ட் (Sierra Strangfeld). சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக சியாரா கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால் குழந்தை கருவிலேயே ட்ரைசோம் 18 (Trisomy 18) என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நோயினால் குழந்தையின் உடல்கள் சிதையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை சியாராவிடம் தெரிவித்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதில் சியாராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் உடலில் இருந்த ட்ரைசோம் 18 நோயை அவர்களால் நீக்க முடியவில்லை. இதனால் பிறந்த 3 மணிநேரத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தெரிவித்த சியாரா, ‘அம்மா தன் குழந்தைக்கு பால் ஊட்டுவதை விட சிறந்த உணர்வு வேறு ஏதும் இருக்க முடியாது. நான் இரண்டாவது முறையாக கர்ப்பமானபோது இதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் என் மகன் இறக்க போகிறான், அவனுக்கு பாலூட்ட முடியாது என்ற செய்தி என்னை மிகவும் பாதித்தது. என் குழந்தைக்கு என்ன நடக்கப்போகிறது என எனக்கு முன்பே தெரியும். இருந்தும் அவனை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என சிறு எண்ணம் மனதின் ஓரத்தில் இருந்தது. ஆனால் அது கனவாகவே போனது. ஒருவேளை என் குழந்தை இறந்தால் அவனுக்காக சுரந்த தாய்ப்பாலை தானமாக கொடுக்க வேண்டும் என முன்பே முடிவு செய்தேன். தானம் கொடுப்பதற்காக நள்ளிரவு கூட எழுந்து பாலை சேமித்து வைப்பேன். எனக்கு தெரியும் என் மகன் எப்போதும் என்னுடன் இருப்பான் என்று’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

WOMAN, BREASTMILK, DONATES, NEWBORN, DIES, AMERICA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்