'கேக் உண்ணும் போட்டி'... 'அவசர அவசரமாக சாப்பிட்ட பெண்மணி'... 'வலிப்பு வந்து நேர்ந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் கேக் உண்ணும் போட்டியில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த நாட்டின் குயின்ஸ்லாந்தில் கடற்கரையில் உள்ள ஹெர்வி பே (Hervey Bay) என்னும் ஹோட்டலில் அந்த நாட்டின் பாரம்பரிய கேக்கான லாமிங்டன் (Lamington) எனும் கேக் உண்ணும் போட்டி நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட 60 வயதான பெண் ஒருவர், அந்த கேக்கை குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டு முடிப்பதற்காக வேகமாக சாப்பிட்டுள்ளார்.
தேங்காய் மற்றும் சாக்லேட்டால் செய்யப்பட்ட லாமிங்டன் கேக் ஸ்பான்ச் போன்று இருக்கும். கேக் துண்டுகளை வேகமாக எடுத்து வாய்க்குள் வைத்து திணிக்க முயன்ற போது, அந்தப் பெண்மணிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. ஹோட்டலிலேயே முதுலுதவி செய்யப்பட்டாலும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்தப் பெண்மணி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போட்டியை நடத்திய உணவகம், உயிரிழந்த பெண்மணிக்கும், அவரது குடும்பத்துக்கும் சமூக வலைத்தளத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இவங்கள்ல யாரு?'... 'டி20 உலகக் கோப்பை விக்கெட் கீப்பர்'... 'கங்குலி சொன்ன அதிரடி பதில்'!
- ரிக்கி பாண்டிங்கிற்கே பயிற்சியாளராகும் “இந்திய வீரர்!”... கொண்டாட்டத்தில் திளைக்கும் ரசிகர்கள்!
- வயிற்று வலியால் துடித்த சிறுமி.... 'ஸ்கேன்' ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி... உறைந்து போன 'மருத்துவர்கள்'...
- காட்டுத்தீ ‘நிவாரண’ நிதிக்காக... ‘மாடல்’ செய்த ‘காரியத்தால்'... பக்கத்தை ‘பிளாக்’ செய்த ‘இன்ஸ்டாகிராம்’...
- 'இதற்கு மேல் முடியாது!... ஆஸ்திரேலியா காட்டுத் தீ குறித்து விஞ்ஞானி எச்சரிக்கை...'
- 'அப்பா வரமாட்டாருடி தங்கம்'... 'சவப்பெட்டியை சுற்றி வந்த பிஞ்சு'...நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்!
- அதிக 'தண்ணீர்' குடிப்பதால் நீர் பற்றாக்குறை ... 10 ஆயிரம் 'ஒட்டகங்களை' பறந்துபறந்து சுட்டுக்கொல்ல முடிவு...!
- “ஒரு மாதமாக தீராப் பணி்!”.. “இப்படி ஒரு காட்டுத்தீயை பார்த்ததே இல்லை”.. “அப்பா அழுதார்”.. உருக்கும் பதிவு!
- அப்பாவின் உயிர் தியாகம் அறியாத... 19 மாத குழந்தை... தந்தையின் இறுதிச் சடங்கில்... மனதை உருக்கிய சம்பவம்!
- ‘இந்த ஒருநாள் டீமுக்கு நம்ம தோனிதான் கேப்டன்’..! வெளியான ‘வெறித்தனமான’ லிஸ்ட்..!