ஜிம்மில் 181 கிலோ வெயிட்டை தூக்கிய இளம்பெண்.. கொஞ்ச நேரத்தில் நடந்த பகீர் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உடற்பயிற்சி செய்வது நம்முடைய உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் என்பதை பல்வேறு மருத்துவர்கள் ஆய்வுப் பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆனால், அதே வேளையில் உடற் பயிற்சியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்பர்கள் நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மோசமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். அப்படி, அளவுக்கு அதிகமான எடையை தூக்கும் போது இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்திருப்பது மெக்ஸ்சிகோவில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertising
>
Advertising

உக்ரைன் மீது தாக்குங்கள்.. போரை அறிவித்த ரஷ்யா.. புதின் உத்தரவால் பெரும் சிக்கல்

அளவுக்கு அதிகமான எடை

மெக்சிகோவில் உள்ள உள்ளூர் ஜிம்மில் உடற்பயிற்சிக்காக வந்த பெண், 400lb (சுமார் 181 கிலோ) எடையை வெயிட் லிப்ட் செய்திருக்கிறார். அப்போது அவர் நிலை தடுமாறியதால் அவர்மீதே வெயிட் விழுந்திருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்திருக்கிறார்.

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரத்தின் பேரல்வில்லோ பகுதியில் அமைந்து இருக்கிறது அந்த ஜிம். அங்கு வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண் ஒருவர் வந்திருக்கிறார். வெயிட் லிப்ட் பயிற்சியில் அவர் ஈடுபட்ட போது , அவரால் அந்த எடையை சமாளிக்க முடியாமல் சரிந்திருக்கிறார். பெண்ணின் கழுத்துப் பகுதியில் எடை விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அந்தப் பெண்மணி உயிரிழந்ததாக தெரிகிறது.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து மாநில பொது வழக்குத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்த போது, "அந்தப் பெண்மணி உடற்பயிற்சி நிலையத்திற்கு தந்து மகளுடன் வந்து இருக்கிறார். பயிற்சி செய்யும்போது அந்த ஜிம் பயிற்சியாளர் அருகில் நின்று இருந்திருக்கிறார். எடையை தூக்க முடியாமல் அவர் சரிந்த போது பயிற்சியாளரும் அவரது மகளும் பெண்மணியை மீட்க போராடியிருக்கின்றனர். சிறிது நேரத்தில் அவரை விடுவித்தாலும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அங்கேயே மரணம் அடைந்திருக்கிறார்" என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜிம் உரிமையாளரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

வைரலான வீடியோ

பெண் ஒருவர் எடையை தூக்கும்போது, மரணம் அடைந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

எகிறும் பெட்ரோல், டீசல் விலை.. ரஷ்யா - உக்ரைன் போரால் நடைபெற இருக்கும் விபரீதங்கள்..!

WOMAN CRUSHED TO DEATH, LIFT 400LB BARBELL, MEXICO, உடற்பயிற்சி, அளவுக்கு அதிகமான எடை, பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்