ஒரேநாள்ல 512 போன்கால்.. அதுவும் ஒரே பெண்கிட்ட இருந்து .. கடுப்பான காவல்துறை.. கடைசியா போன் பண்ணி அந்த பெண் சொன்ன விஷயம் இருக்கே..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் அடிக்கடி காவல்துறை அவசர அழைப்பு எண்ணுக்கு போன் செய்து அதிகாரிகளை அவதூறாக பேசிய பெண்மணியை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
Also Read | ஊழியர்களுக்கு ரூ.63 லட்சம் சம்பளம் கொடுத்த CEO-ன் திடீர் அறிவிப்பு.. கலங்கிப்போன பணியாளர்கள்.. என்ன ஆச்சு.?
பொதுமக்கள் பாதுகாப்புடன் வாழவும், அச்சமின்றி தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்வதை உறுதி செய்வதையே நோக்கமாக கொண்டு காவல்துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அசாதாரணமான சூழ்நிலைகளில் மக்கள் காவல்துறையை அழைக்க எதுவாக ஒவ்வொரு நாட்டு காவல்துறையினரும் குறிப்பிட்ட எண்ணை அறிவித்திருக்கின்றனர். அப்படி அமெரிக்காவில் அவசர உதவி தேவைப்படும் மக்கள் 911 எனும் எண்ணுக்கு போன் செய்யலாம். கால் செய்பவரின் தேவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்குவார்கள். ஆனால், அதை வேடிக்கைக்காக செய்துவந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
போன்கால்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பினெல்லாஸ் கவுண்டியைச் சேர்ந்தவர் கார்லா ஜெபர்சன். 51 வயதான இவர் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12,000 முறை 911 க்கு கால் செய்திருக்கிறார். கால் செய்தது மட்டும் அல்லாமல் அதிகாரிகளை இழிவுபடுத்தும் விதமாகவும் வசைபாடியும் வந்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் காவல்துறை செய்தித் தொடர்பாளர் யோலண்டா பெர்னாண்டஸ்,"அவசர அழைப்பு எடுப்பவர்களை துன்புறுத்தவும், கூச்சலிடவும், இழிவுபடுத்தவும் கார்லா முயற்சித்து வந்தார். போலீஸ் அமைப்பை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கில் அவர் செயல்பட்டிருக்கிறார். இவ்வளவு தூரம் எல்லை மீறியவர்கள் யாருமில்லை" என்றார்.
விளையாட்டு
அதிகபட்சமாக ஒருமுறை 24 மணி நேரத்தில் 512 முறை 911க்கு போன் செய்திருக்கிறார் கார்லா. இதே குற்றத்திற்காக ஜெபர்சன் முன்னதாக ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே வந்தார். மேலும் அழைப்புகள் வந்தால் வழக்குத் தொடரப்படும் என்று அவருக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் அதன்பிறகும் 911 க்கு போன் செய்து தான் இந்த விளையாட்டை விரும்புவதாகவும் தன்னை கைது செய்யும்படியும் கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 911 அவசர எண்ணைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், அதிகாரிகளைத் துன்புறுத்தியதற்காகவும் அவர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காதலியை மீட் பண்ண இளைஞர் போட்ட பிளான்.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!
- "ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் சூடாவே இல்ல சார்".. போலீஸை அழைத்த இளைஞர்.. Spot'ல வந்து போன் பண்ணது யாருன்னு பாத்த போலீஸ்க்கு செம ஷாக்
- தான் வளர்த்த நபர் மீது காதல்.. திருமணம் செய்து 2 ஆண்டுக்கு பிறகு.. வெளியான தகவல்!
- "ஊர்லருந்து வந்ததை வெளில சொல்லிடாதீங்க".. மாமனாரிடம் துபாய் ரிட்டர்ன் மருமகன் கொடுத்த பெட்டி.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. அடுத்தடுத்து வந்த ட்விஸ்ட்..!
- "அது மெண்டல் டார்ச்சர் தான்".. கல்யாணமாகி 10 மாசத்துல டைவர்ஸ்.. மனைவி சொன்னதை கேட்டு அதிர்ச்சியான நீதிபதிகள்.. வெளியான பரபரப்பு தீர்ப்பு..!
- "சிறையில் வைத்து இளம்பெண் கொடுத்த முத்தம்".. பறிபோன கைதியின் உயிர்.! போலீஸாரை உறைய வைத்த சம்பவம்.! கைதான பெண்.!
- வானத்தில் இருந்து விழுந்த 'மர்ம' உலோக பொருள்??.. "ரோடு சைடு'ல வந்து கெடந்துருக்கு.." குழப்பத்தில் போலீசார்.. அதிர்ச்சி பின்னணி
- பொண்ணுக்கும் பொண்ணுக்கும் நடக்கும் கல்யாணம்.. "Function முடிஞ்சதும் இத Follow பண்ணுவாங்களாம்".. வருசா வருசம் நடக்கும் வினோத சடங்கு!!
- ஆபிஸ்ல Friendly-ஆ கட்டிப்பிடிக்கும்போது துடித்த பெண்.. வலி தாங்க முடியாம ஹாஸ்பிடல் போனப்போ தான் விபரம் தெரிஞ்சிருக்கு..!
- "எங்க அப்பா சாகுறதுக்கு முன்னாடி எழுதுன Letter இது.." 9 வருஷம் கழிச்சு தெரிஞ்ச 'உண்மை'.. "புள்ளைங்க கையில் கிடைக்கும்னு தெரிஞ்சே எழுதி இருக்காரு"