"நூறு வருஷம் வாழணும்னா இதை பண்ணாதீங்க".. 100 வயதை கடந்த பாட்டி கொடுத்த விநோத அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தைச் சேர்ந்த 100 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கான சில விநோத அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நிலாவுல மாட்டிக்கிட்டேன்.. 100க்கு போன் பண்ண முடியல".. நெட்டிசனின் போஸ்ட்.. போலீசின் வேறலெவல் ரிப்ளை..!

சமகாலத்தில் நூறு வயது வரை வாழ்வது என்பது மிகவும் அசாதாரணமான காரியமாக ஆகிவிட்டது. மருத்துவத்துறையில் பல்வேறு உயரங்களை மனிதகுலம் அடைந்திருந்த போதிலும் ஆரோக்கியத்துடன் பன்னெடுங்காலம் வாழ்வது சவாலான காரியமாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சமீபத்தில் தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். மேலும் மனிதர்கள் நீண்ட காலம் உயிருடன் வாழ்வதற்கு சில விநோதமான அறிவுரைகளையும் அவர் வழங்கி இருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஆலிவ் வெஸ்டர்மேன். நர்சரி பள்ளி ஒன்றில் செவிலியராக பணிபுரிந்த ஆலிவ் காதலித்து சாம் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். பயண எழுத்தாளரான தனது கணவருடன் இணைந்து பல நாடுகளுக்கு சென்று வசித்து இருக்கிறார் ஆலிவ. சாம் மரணம் அடைந்த பிறகு தனியாக வசிக்க துவங்கியிருக்கிறார் இவர். தங்களுக்கு குழந்தை இல்லை என்பதால் நர்சரி பள்ளியில் வேலை பார்த்த போது அங்கு வரும் குழந்தைகளுடன் கனிவாக பேசுவதும் அவர்களுடன் விளையாடுவதும் தனக்கு மிகுந்த மன அமைதியை கொடுத்ததாக ஆலிவ் கூறுகிறார்.

மேலும் முன்பின் தெரியாத மனிதர்களை தவிர்ப்பதன் மூலமோ அல்லது அவர்களுடன் பேசாமல் இருந்ததன் காரணமாகவோ தான் இவ்வளவு காலம் தான் வாழ்ந்ததாக சொல்கிறார் ஆலிவ். இதனிடையே சமீபத்தில் ஆலிவ் தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இங்கிலாந்தின் செஸ்டர் பகுதியில் உள்ள குடியிருப்பு இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது பேசிய ஆலிவ் "விசித்திரமான மனிதர்களுடன் பேசுவதை தவிர்க்கவும். அப்போதுதான் நீங்கள் நீண்ட நாட்கள் வாழ முடியும். உங்களுக்கு நான் சொல்லக்கூடிய சிறந்த அறிவுரை எதுவென்றால் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருங்கள். உங்களிடம் இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளுடன் எனது பணி அமைந்தது. இது உங்களை நிச்சயமாக இளமையாக வைத்துக் கொள்ள உதவும். எனக்கு 100 வயதாகிறது என்பதை என்னாலே நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read | 13 வருஷமா வீட்டுல இருந்த சோஃபா.. எதார்த்தமா பிரிச்சி பார்த்த பெண்.. ஒரு நிமிஷம் அரண்டு போய்ட்டாங்க..!

OLD WOMAN, SECRET, HAPPY LIFE, 100 YEARS OLD WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்