'முட்டாள்தனமான' செயல் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை... 'எதிர்க்கும்' விஞ்ஞானிகள் காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா பெருமையுடன் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு எந்த நாடு முதலில் தடுப்பூசியைத் தயாரிக்கும் என்ற பந்தயத்தில் முதலாவது வருவதற்காக அவசர கதியில் தடுப்பூசியை வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் பொறுப்பற்ற, முட்டாள்தனமான செயல் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த தடுப்பூசியை கொண்டு ரஷ்யா மனிதர்கள் மீது 2 கட்ட சோதனைகளை மட்டுமே நடத்தி உள்ளது. 3-வது கட்ட பரிசோதனை இன்னும் முடிவடையவில்லை. குறைந்தது 10,000 பேருக்கு 3-வது கட்ட சோதனை நடத்திட வேண்டும். ஆனால் ரஷ்யா அதற்கு முன்பே பெருமளவில் தடுப்பூசி தயாரித்து வருவது நெறிமுறைகளுக்கு எதிரானது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம், ''ரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்க வேண்டுமானால், தடுப்பூசி பாதுகாப்பு பரிசோதனை தொடர்பான தரவுகளை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய சுகாதார அதிகாரிகளிடம் நெருங்கிய தொடர்பிலிருந்து கண்காணித்து வருகிறோம்,'' என தெரிவித்து இருக்கிறது.
ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவின் இந்த அவசர தடுப்பூசி முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இதுவரைக்கும் நிறைய பேருக்கு வேலை பறி போயிருக்கலாம்.. ஆனா இனிமேதான் பேரழிவு காத்திருக்கு!”.. கனத்த இதயத்துடன் பிரிட்டன் அதிகாரி!
- 'இந்த எளிய சோதனை போதும்'... 'கொரோனாவால் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களை கண்டறிய'... 'ஆய்வாளர்கள் புது கண்டுபிடிப்பு!'...
- 'ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக்-5...' உண்மையாகவே கண்டு பிடிச்சிட்டாங்களா...? - விஞ்ஞானிகள் எழுப்பும் சந்தேகங்கள்...!
- 'திடீரென அதிகரித்த பாதிப்பு'... 'எங்கிருந்து பரவுகிறது என பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!'...
- கொரோனா ரொம்ப வேகமா 'பரவுறதுக்கு' இதுவும் ஒரு முக்கிய காரணம்... ஐ.நா எச்சரிக்கை!
- சேலத்தில் ஒரே நாளில் 205 பேருக்கு கொரோனா!.. மதுரையில் தொற்று குறைகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- அடக்கடவுளே! 4 மாசத்துக்கு அப்புறம் 'மீண்டும்' கொரோனா... அவசர,அவசரமாக 'ஊரடங்கை' அமல்படுத்திய நாடு!
- செப்டம்பர் மாசம் 'தடுப்பூசி' கெடைக்கும்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு... அவங்ககிட்ட இருந்து 'நம்ம' வாங்கலாமா?
- தமிழகத்தில் மேலும் 118 பேர் கொரோனாவுக்கு பலி!.. தீவிர பரிசோதனையில் சென்னை?.. முழு விவரம் உள்ளே
- “காப்பாத்துங்க!!”.. நோயாளி உள்ளே சென்றதும் டாக்டரிடம் இருந்து வந்த மரண ஓலம்.. எட்டிப்பார்த்தவர்களின் ஈரக்குலை நடுங்கிய ‘பதைபதைப்பு’ சம்பவம்!