"ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் இப்படி உயர்ந்திருக்கும்!" - அதிர வைத்த ஆய்வு ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டிவிடும் என்று அந்நாட்டில் தேசிய நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்டு தெரிவித்துள்ளார். என்னதால் கொரோனாவின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும், அதன் தாக்கம் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரேசிலாகத்தான் உள்ளது என்று சொல்லும் அளவுக்கு இந்தியா உட்பட 200க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.
உலக அளவில் 44 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 3ல் ஒரு பங்கு அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமரிக்காவில் உயிரிழப்பு மட்டும் 86 ஆயிரத்தைத் தாண்டியது. அங்கு மட்டும் 14 லட்சம் பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா உட்பட பல நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அமெரிக்கா மட்டும் அலட்சியமாக இருந்ததே அந்நாட்டின் இந்த படுகோர நிலைக்குக் காரணம் என்று கூறப்படும் சூழலில், அந்நாட்டில் தற்போது நோய்த்தாக்கம் குறைந்த பாடில்லை எனும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் ஜுன் மாதம் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சமாக உயரும் என்று அந்நாட்டில் தேசிய நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கொரோனாவுக்கான பரிசோதனைகளை அமெரிக்கா 400 சதவீதம் அதிகரித்தால் மட்டுமே, நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துமுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவால் சிங்கிள்ஸ்க்கு ரொம்ப கஷ்டம்'... 'சிங்கிள்ஸ் உங்க பாலியல் துணையை தேடிக்கோங்க'... அதிரடியா அறிவித்த நாடு!
- இந்தியாவில் 5 லட்சம் பேர் ‘இதுக்காக’ காத்திருக்காங்க.. எல்லாத்துக்கும் காரணம் ‘கொரோனா’.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
- 'கல்யாணத்துக்கு லீவ் வேணும்ன்னு கேட்டா, கொடுத்திருப்பேன்'... 'அதுக்காக இப்படியா'... ஒரே லெட்டர்ல வைரலான விமானி!
- 'இது ஆரம்பம் தான், இன்னும் பரவலாம்'... 'அமெரிக்காவுக்கு வந்த புதிய தலைவலி'... '2 குழந்தைகள் பலி'... அதிர்ச்சியில் பெற்றோர்!
- "சீனாவை முந்திட்டோமா...?" "என்ன சார் சொல்றிங்க..." "எதுல முந்திட்டோம்...?"
- மிகுந்த 'நம்பிக்கையளிக்கும் தடுப்பூசி...' அடுத்த 'மாதத்திற்குள்' சோதனை 'முடிவு' கிடைத்து விடும்... '10 கோடி' தடுப்பூசிகள் தயாரிக்கத் 'திட்டம்...'
- 'நியாயமான திருடன்...' 'மன்னிப்பு கடிதம் வேற...' 'இருந்தாலும்' அவங்க 'நிலைமை' அப்படி...
- 'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'
- ஊழியர்களை 'வேலையை' விட்டு தூக்கி... 'சம்பளத்திலும்' 50% கைவைத்த 'முன்னணி' நிறுவனம்!
- 'பெண்களை' விட ஆண்களை... கொரோனா அதிகமா 'தாக்குறதுக்கு' காரணம் இதுதானாம்... உடைந்த மர்மம்!