Video: “முதல்ல எங்க மக்கள் எல்லாருக்கும் கெடைக்கணும்.. அப்றம் தான் மத்த நாடுகளுக்கு!” - தடுப்பூசி விவகாரத்தில் ‘சர்வதேச வர்த்தக அமைச்சர்’ கறார்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பிய யூனியனுக்கு தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்றால் முதலில் தங்களது தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஐரோப்பிய யூனியனுக்கு தடுப்பூசி கொடுக்க முடியும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது பிரிட்டன்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் பிரிட்டன் ஒன்று. இந்த நிலையில் கொரோனா வைரஸை எப்படியாவது கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டன் போராடி வருகிறது. இதன் ஒரு அங்கமாக அங்கு தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் Liz Truss, பிற நாடுகளுக்கு 36 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய, தயாரிப்பு நிறுவனங்களிடம் பிரிட்டன் அரசு கேட்டிருப்பதாகவும் அந்த தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு அனுப்புவதால் தற்போது பிரிட்டனில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு பாதிப்பு எதுவும் ஏற்படக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக நிர்ணயித்த வகையில் தடுப்பூசி செலுத்தப்படும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் தான் அந்த தடுப்பூசிகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்த Liz Truss தடுப்பூசி விநியோகத்தில் ஐரோப்பிய நாடுகளுடனும், வளரும் நாடுகளுடனும் இணைந்து பிரிட்டன் செயல்படும் என சுகாதாரத்துறையைச் சேர்ந்த நதீம் ஸஹாவி கூறியது உண்மைதான். என்றாலும் பிரிட்டன் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு மாதம் முடிவதற்குள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அபாயம் நிறைந்த பிரிட்டனில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு விடவேண்டும் என்கிற இலக்கை நோக்கி நகர்ந்து பிரிட்டன் கொண்டிருக்கிறோம். நிறுவனங்களிடமிருந்து உரிய நேரத்தில் தடுப்பூசிகளை பெறுவதில் தான் இப்போது பிரச்சினைகள் நீடிக்கின்றன.
ஆக பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி எவ்வளவு வழங்குவோம் என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் திட்டமிட்டபடி பாதிப்பு ஏற்படாமல் தொடர்ந்து நடந்தால் தான், அந்த திட்டம் முடிவதற்கு முன்னரே பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பப்படும் என்று Liz Truss தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வெளிய வந்த நாளே அதிரடி!.. அந்த ஒரு செயல்... "சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும்"!.. அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு கருத்து!.. என்ன நடந்தது?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- “பள்ளி, கல்லூரி மாணவர்களுள் குறிப்பிட்டோருக்கு வகுப்புகள்.. திரையரங்குகளில் 100% அனுமதி!.. ஆனால் இதுக்கு 50% தான்”! - தமிழக அரசின் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு.. முக்கிய அம்சங்கள்!
- மல்டிபிளக்ஸ் மற்றும் தனி தியேட்டர்களில் 100% இருக்கை தொடர்பாக வெளியான 'மத்திய அரசின் ‘முக்கிய’ அறிவிப்பு!
- 'தமிழகத்தின்' இன்றைய (30-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- ‘பிரிட்டனின் கடல் கடந்த பாஸ்போர்ட் இனி செல்லாது: சீனா’!.. ‘பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை ரத்து செய்த நாடுகள்!’.. ஐரோப்பா வந்து செல்லும் ‘மூளைக்கார’ பயணிகள்! ஏன் தெரியுமா?
- கடல்லையே இல்லையாம்...! 'எங்க மாவட்டத்துல கொரோனா பூஜ்ஜியம்...' - கெத்து காட்டும் தமிழக மாவட்டம்...!
- 'தமிழகத்தின்' இன்றைய (29-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- ஆணின் விந்து வீரியத்தை அழிக்குமா கொரோனா வைரஸ்?!.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
- 'தமிழகத்தின்' இன்றைய (28-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!