"என்மேல வச்ச நம்பிக்கையை நான் காப்பாத்தல".. ஆஸ்கார் சம்பவத்திற்கு பிறகு வில் ஸ்மித் எடுத்த பரபரப்பு முடிவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி பற்றி பேசிய கிறிஸ் ராக்கை அறைந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இதுபற்றி முதன்முதலில் மனம் திறந்திருக்கிறார் கிறிஸ் ராக்.

Advertising
>
Advertising

ஆஸ்கார்

திரைத்துறையில் அளிக்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்று ஆஸ்கார். உலகம் முழுவதும் வெளியாகும் படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து கலைஞர்களுக்கு விருது அளிக்கும் இந்த விழா ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நேற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்றது. ஆஸ்கார் விழாவில் மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.


கோபமடைந்த ஸ்மித்

தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடி குறித்து பேசினார். இதனால் கோபமடைந்த ஸ்மித் மேடைக்கு சென்று ராக்கை பளார் என்று அறைந்துவிட்டு கீழே இறங்கி சென்றார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

மன்னிப்பு

இதனை அடுத்து தன்னுடைய செயலுக்கு வருந்துவதாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் வில் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில்,"எந்த வடிவில் வன்முறை இருந்தாலும் அது நச்சுத்தன்மையானது, அழிக்கக்கூடியது. ஆஸ்கார் இரவில் அகாடமி விருதுகளின் போது என்னுடைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது. பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன், நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார் ஸ்மித்.

ராஜினாமா

இந்நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (Academy of Motion Picture Arts and Science) அமைப்பின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஸ்மித். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உறுப்பினர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன், மேலும் ஆஸ்கார் அமைப்பு பொருத்தமானதாகக் கருதும் எந்த விளைவுகளையும் ஏற்றுக்கொள்வேன். 94 வது அகாடமி விருது வழங்கும் விழாவில் எனது செயல்கள் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும், மன்னிக்க முடியாததாகவும் இருந்தன. நான் காயப்படுத்தியவர்களின் பட்டியல் நீளமானது. அதில் கிறிஸ், அவரது குடும்பத்தினர், எனது அன்பான நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் உள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை

மேலும் ஸ்மித் அந்த அறிக்கையில்,"அகாடமியின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டேன். மற்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் தங்களது அசாதாரணமான பணிக்காக கொண்டாடுவதற்கும் கொண்டாடப்படுவதற்குமான வாய்ப்பை நான் பறித்துவிட்டேன். நான் மனம் உடைந்துவிட்டேன். சாதனைகளுக்காக கவனம் செலுத்தத் தகுதியானவர்கள் மீது மீண்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். மேலும் திரைப்படத்தில் படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை மேம்படுத்த அகாடமி தொடர்ந்து அனுமதிக்க விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

OSCAR, WILLSMITH, CHRISROCK, ஆஸ்கார், வில்ஸ்மித், கிறிஸ்ராக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்