'நெக்ஸ்ட் மீட் பண்றேன்!'... ‘2024-ஐ குறிவைக்கும் டிரம்ப்!’... அமெரிக்காவில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ‘வைரல்’ முழக்கம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வாஷிங்டன்: 2024-ல் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடவுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தடலாடியாக அறிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில்  வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வியை தழுவினார். எனினும் டிரம்ப்பினால் அதை ஏற்க முடியாமல் இருந்து வந்தார்.

இதனால் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. எனினும் டிரம்ப் தரப்பால் ஒன்றும் செய்ய முடியாததனால் அதிகாரங்களை பைடனிடம் ஒப்படைத்துவிட்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற டிரம்ப் முடிவெடுத்தார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், டொனால்ட் டிரம்ப் ஆற்றிய மிக நீண்ட உரையில்,, இந்த 4 ஆண்டுகளும் சிறப்பாகவே இருந்தது. மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து இருக்க முயற்சிப்போம். சாத்தியம் இல்லை என்றால் அடுத்த 4-வது ஆண்டில் மீண்டும் உங்களை சந்திப்பேன் என்று கூறினார்.

2024-ம் ஆண்டு அமெரிக்  அதிபர் தேர்தலிம், மீண்டும் தாம் போட்டியிடப் போவதை சூசகமாக அறிவித்த டிரம்ப்பின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்