'இவர்களுக்கு மட்டும் பெரியளவில் பாதிப்பில்லை?!!'... 'புதிதாக பரவும் அதிதீவிர வைரஸ் குறித்து'... 'வெளியாகியுள்ள ஆறுதல் தகவல்!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஏற்கெனவே பரவியுள்ள கொரோனா பாதிப்பிலிருந்தே உலகம் இன்னும் மீளாத நிலையில், தற்போது பிரிட்டனில்  பரவி வரும் புதிய அதிதீவிர கொரோனா வைரஸ் மேலும் கவலையை அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் தற்போது பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் முன்பிருந்ததை விட, 70 சதவீதம் அதிவேகமாக மனிதர்களிடையே பரவும் தன்மை கொண்டதென கூறப்படும் நிலையில், ஏற்கெனவே கொரோனா பாதித்தவர்களுக்கு இந்த வைரஸ்  பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், பிரிட்டனில் பரவி வரும் அதிதீவிர தொற்று காரணமாக தற்போது தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தொற்று நோய் நிபுணர் ஜேக்கப் ஜான், "தற்போது பரவி வரும் அதிதீவிர கொரோனா வைரஸ் அதன் பழைய தொற்றும் முறையிலிருந்து சற்று மாறுபட்டுள்ளது. இப்படி தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டுள்ள புதிய கொரோனா வைரஸ் அதன் தொற்றும் முறையிலிருந்து மாறுபட்டுள்ளதே தவிர அதன் ஆன்டிஜெனிக் தோற்றத்தில் எந்த மாறுபாடும் ஏற்படவில்லை. அதனால் ஏற்கெனவே கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி உருவானவர்களுக்கு இந்த தொற்றிலிருந்தும் பாதிப்பு கிடைக்கும்" எனக் கூறியுள்ளார். அதோடு, தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் புதிய அதிதீவிர கொரோனா தொற்றிலிருந்தும் காக்கும் வகையிலேயே இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மேலும் ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. அதேவேளையில், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்